
நேர் மறை எண்ணங்கள் தான் வாழ்க்கையை வளப்படுத்துகின்றன என்று உளவியல் நிபுணர்கள் கூறுவதை
படிக்கும் போது நடைமுறைப் பழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆர்வம் பொங்குகிறது.
இந்த நல்ல நேர்மறையோடு தொடங்குவோம்.
எதிர்க் கட்சிகள் அமளி.
நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைப்பு.
படித்தவர்கள் -- அனுபவச் செழுமையால் பக்குவப் பட்டவர்கள் --
முக்கியமான பதவிப் பொறுப்பில் இருப்பவர்கள்... இப்படி
அமளி துமளியில் ஈடுபட்டு விலை மதிக்க முடியாத நேரத்தைப் பாழ் படுத்துவதும் பாராளு மனாறத்தை இழிவு படுத்துவதும் எவ்வளவு பெரிய அவலம்...கேவலம்...
நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் கலங்குகிறது.
கவலைப் பீறிடுகிறது.
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வெளியாகி இருந்த கேளப்பன் நாயர் வரலாறு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இஸ்லாமிய மக்கள் மிகுந்த மலப்புரத்தை
தனி மாவட்டமாக அமைத்தால் ஒரு மினி பாகிஸ்தானை உருவாக்கியதாகி விடும் என்று எச்சரித்து வாதிட்டவர், மத நல்லிணக்கம் பற்றிய விஷயத்தில் அக்கறை
காட்டி வந்தார் என்று அறியும் போது ஆனந்தம் பொங்கியது.
வரலாறு படிக்கும் போது நம்மை அறியாமலே பரவசமும் பாடங்களும் பதிவாகி விடுவதை உணர முடிகிறது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதி தமிழ் நாடு இ பேப்பரில் முக்கியமான பகுதி.
சந்தேகமில்லை.
சிரமம் பொருட்படுத்தாது தொடர்ந்து இந்தப் பகுதியை அழகு படுத்தி வரும் ஆசிரியர் குழுமத்தினருக்கு ரொம்பவே நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம்.
சீர்காழி ஆர்.சீதாராமன் எழுதிய விதவையின் வலி படித்த போது நமக்கும் அந்த வலி...
கவிதைகள் அனைத்தும் வழக்கம் போல் சுவை அளித்து
சுவாரஸ்யம் பெருக்கின. பி.கணபதி எழுதிய
இதுவும் மாறும்
கவிதையின் வரிகள்
வாசிப்போரின் மனதில் நல்ல மாற்றத்தை உண்டு பண்ணும் என்பது உறுதி.
வெ.இறையன்பு எழுதிய சின்னச் சின்ன வெளிச்சங்கள் நூல் மதிப்புரை மிகவும் சிறப்பாக
அமைந்திருந்தது.
இப்படி சொல்லி மகிழ இன்னும் எத்தனை எத்தனையோ செய்திகள்....
தினந் தினம் தெவிட்டா தேனமுதமாய் தித்திக்கும் தமிழ் நாடு இ பேப்பரின் இந்த
வெற்றிப் பயணம்
லட்சக் கணக்கான வாசகப் பெருமக்களுக்கு நல் விருந்து.
தொடர்ந்து பயணிப்போம்.
தமிழ் நாடு இ பேப்பரின் வளர்ச்சிக்கு உறு துணையாக என்றென்றும் நிற்போம்.
பி.சிவசங்கர்
கோவை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?