
ஓரே திகைப்பு! தமிழ்நாடு இ இதழ்
கற்பதனாலாய பயனாக கற்கண்டுச் சுவை கண்டு திகைப்பு திரள்வது உண்மை.
கருக்கல் முற்றி காரிருள் சூழ,
பருக்கைகள் பந்தியில் சிந்தியது போல, நதியின்
பெருக்கைப் போலப்
புரள்வது வாசகர்
படைப்பின் அலைகளின் வீச்சு!
பசி முந்தியா? இல்லை, ருசி முந்தியா?
கேள்விக்கு விடையாய் வரும்
ருசியே முந்தி எனக் கூறும்
ரிஷிவந்தியா நறுக்ஸ்,
கற்பனையில் சொற்சுவையைக்
கணிசமாகக் கலந்து தரும் விற்பன்னர் இரா. இரவியின்
விந்தைப் புதுக்கவிதை,
காதலரின் களிப்புகளைக் கவிதைகளாய்,
கண்கலங்கும் தவிப்புகளைக் காவியமாய்
ஓதுகின்ற உயர் தமிழில் சீர்காழி சீத்தாராமன் -
என
வாதத்திற்கு இடமேது
வாசகர்கள் திறமைக்கு?
திருமுருகன் படைவீட்டை திவ்யமாகக் கோர்த்து வைத்த
சசிகலா அம்மையாரின் சத்தான சாதனை,
ஆறுமுகன் கருணைக்கு அழகாகக் கவி செய்த
திருமதி. ஜெயா சுரேஷின் திருத்தமான கோரிக்கை.
அன்பர் திரு. நெல்லைக் குரலோன் சாக்லேட் கவிதை -
அவர் நெஞ்சத்தின் கீர்த்தனம். என் நாவில் நர்த்தனம்.
வரிசை கட்டி வரும் வண்ணத் தமிழ்ப் பேரணி,
அவருக்கே உரிய, உயரிய வரப்பிரசாதம்.
சூடான செய்திக்குவை,
சுவையான படைப்புகள்.
தனித்தரம் கொண்ட எம் தமிழ்நாடு இதழுக்கு
பனித்திடும் விழியோடு பணிவான வாழ்த்துக்கள்.
கோடி வாசகர் லட்சியத்தைத்
தேடித் தரும் வாசக சொந்தங்களுக்கும்
வகையான வாழ்த்துக்களை வழங்கியும் மகிழ்கின்றேன்.
தமிழ்நாடு இ இதழ் வளர்க பொலிவுடன்!
வாழ்க வளத்துடன்!!
பாளை. கணபதி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?