
நமது நீண்ட நாள் வாசகர்
ரிஷி வந்தியா அவர்களின்
மகள் திருமணத்தில் தமிழ்நாடு இ
பேப்பர் குடும்பம் கலந்து கண்டு
வாழ்த்தியது பெருமையாக உள்ளது.
இது ஒவ்வொரு வாசகரும்
பெருமைப்படக்கூடிய விஷயமாகவும்.
ஒவ்வொரு வாசகர்களையும்
தங்கள் குடும்ப உறுப்பினர் போல்
பாவித்து அவர்களின் பிறந்த நாள்
திருமண நாள் இவற்றில் கலந்து
கொண்டு இ பேப்பர் வாயிலாக
வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியாக
உள்ளது. இதற்காகவே வாசகர்கள்
அனைவரும் தமிழ்நாடு இ பேப்பரை
மனதார பாராட்டலாம்.
இனி செய்திக்கு வருவோம்
எட்டு காலிஸ்தான் தீவிரவாதிகளை
அமெரிக்கா கைது செய்துள்ளது.
சரக்கு ரயிலில் தீ விபத்து. ஒருவேளை
ரயிலில் சரக்குகளை ஏற்றி வந்து
இருக்கலாம். பழனி முருகன்
கோவிலுக்கு சிங்கப்பூர் அமைச்சர்
ஹெலிகாப்டரில் வந்து இறங்கி
சாமி தரிசனம் செய்தார்.
திருப்பரங்குன்றம் முருகன்
கோவிலில் கும்பாபிஷேகம்
கோலாகலமாக நடைபெற்றது.
இன்றைய தினம் சமையல் டிப்ஸ்
அனைத்தும் அருமையாக இருந்தது
பள்ளிகளில் ப வடிவ இருக்கைகள்
உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்
செய்தி தொடர்பாளர்களாக
நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள்
நியமனம். 2030க்குள் பீகாரில்
ஒரு கோடி இளைஞர்களுக்கு
வேலை வழங்கப்படும் என
நிதிஷ்குமார் அறிவிப்பு. எல்லாம்
எலெக்ஷன் படுத்தும் பாடு.
புதின் காலையில் நன்றாக பேசுகிறார்
இரவில் உக்ரைன் மீது குண்டை
போடுகிறார் என டிரம்ப் நக்கல்
செய்து உள்ளார்.
இன்றைய தினம் கவிதைகள்
கட்டுரைகள் அனைத்தும்
அருமையாக இருந்தது.
ஒவ்வொரு வாசகர்களின்
கருத்துக்களை படிக்கும் போது
மெய்சிலிர்க்க வைக்கிறது.
வாசகர்கள் அனைவரும்
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு
கடமைப்பட்டு இருக்கிறோம்.
ஏனென்றால் அனைவரும் இ பேப்பர்
குடும்ப உறுப்பினர்கள். ஆவார்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?