வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ).....

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா ).....



தமிழ்நாடு இ பேப்பருக்கு தினசரி 


ஏதாவது எழுதவில்லை என்றால் 


கை பரபரக்கிறது. மனது 


 அலைபாய்கிறது எனவே தினசரி 


ஏதாவது ஒன்றை எழுதுவதை 


வாடிக்கையாக கொண்டு உள்ளேன். 


அருமையான எண்ணற்ற 


வாசகர்களால் தமிழ்நாடு இ பேப்பர் 


தினமும் செயல்பட்டு வருகிறது. 


மேலும் இ பேப்பர் முன்னேற்றத்திற்கு 


நம்மால் முடிந்த உதவி என்றால் 


ஒவ்வொருவரும் குறைந்தது 


ஐந்து நபர்களை ஆவது அறிமுகம் 


செய்ய வேண்டும். மேலும் 


இ பேப்பர் இன் அருள் தரும் தெய்வம் 


என்ற இதழுக்கு நம்மால் முடிந்த 


 அளவுக்கு ஊக்குவிக்க வேண்டும் 


மசோதா குறித்த கேள்விகளுக்கு 


உச்சநீதிமன்றம் 22 ஆம் தேதி 


விசாரணை நடைபெறும் என 


அறிவித்துள்ளது. விஜய் கட்சியில் 


அதிக உறுப்பினர்களை சேர்க்கும் 


நிர்வாகியை நேரில் சந்திக்க 


விஜய் திட்டமிட்டுள்ளார். 


தமிழகத்தில் ஏராளமான பெண் 


நீதிபதிகள் உள்ளனர் என 


தலைமை நீதிபதி பெருமிதம். 


மதுரையில் விளம்பர நிறுவனங்களே 


மின் விளக்குகளை பராமரித்து 


வருகின்றன. பீகாரில் மின்னல் தாக்கி 


34 பேர் பலியாகியுள்ளனர். 


பாளை கணபதி அவர்கள் எழுதிய 


கர்ணன் கஞ்சன் கதை அருமையாக 


இருந்தது. முத்து ஆனந்த் அவர்களின் 


உன் கன்னத்தை ஏந்துகிறேன் 


என்ற கவிதை காதலுக்கு 


இலக்கணமாக திகழ்ந்தது. 


கனவில் வரும் விலங்குகளால் 


என்ன பலன் என்ற கட்டுரை 


மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. 


திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 


போலி கணக்குகள் நடமாடுவதாக 


தேவஸ்தானம் எச்சரிக்கை. 


ஏகே 203. ரக துப்பாக்கிகள் 


உத்தரப்பிரதேசம் அமைதியில் 


தயாரிக்கப்படுகிறது. 3200 கோடி 


மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் 


சத்தீஸ்கர் முதல்வர் மகன் 


கைது செய்யப்பட்டுள்ளார்.


அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரெடி 


என புதின் அறிவித்துள்ளார்.


ஐரோப்பாவில் வெப்ப அலைக்கு 


2300 பேர் பலியாகி உள்ளனர்.


இன்றைய தினம் வந்த கவிதைகள் 


கட்டுரைகள் நகைச்சுவை பகுதி 


ஆன்மீக செய்திகள் என அனைத்தும் 


அனைவரையும் கவரும் விதத்தில் 


அமைந்தது சிறப்பானதாகும். 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%