
*முயற்சி மட்டுமே நாம்!*
ஸாதனை செய்கிறவன் dry யாகப்
போய் விடக் கூடாது என்பது ஒன்று.
இன்னொன்று, அவனுக்கு அஹங்காரம் வந்து விடக் கூடாது. Ego தற்பெருமை தன் சமாச்சாரம் என்ற எண்ணம் உண்டாகி விடக் கூடாது என்பது.
அந்தக் கோணத்தின் அங்கமாயுள்ள அகங்காரம் போவதுஇஇருக்கட்டும்.அது பெரிய விஷயம்.
முடிவாக நடக்க வேண்டியது.
பேச்சு வழக்கில் அகங்காரம் என்கிற
மண்டைக் கனத்தைத் தான் இப்போது சொல்கிறேன்.
வித்யாசத்திற்காக இதை அகம்பாவம் என்று வேண்டுமானால் சொல்லலாம். சாஸ்திர
புத்தகங்களில் அப்படி
( வித்யாசம்) அப்படி இல்லை.Clarify க்காக அப்படி வைத்துக் கொள்ளலாம்.
மூல ' நான் ' எண்ணமான அகங்காரத்தை ஈகோயிஸம் என்றும்
மண்டைக்கன நான்
எண்ணமான அகம்பாவத்தை. ஈகோடிஸம் என்றும் சொல்கிறார்கள் என்று
நினைக்கிறேன்.
நாமாக்கும் மந்த மத்யம் அதிகாரிகளுக்கு மேலே போய் கர்மா
பக்திகளுக்கு மேலே
போய் ஞான வழியில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்
என்ற அபிப்பிராயம்
ஏற்பட்டதானால் போச்சு! அப்படி ஆகாமல் விநய சம்பத்தை ஊட்டுவதற்காகவும்
பக்தியை ஆசார்யாள்
வைத்திருக்கிறார்.
நாம் என்கிறது ஒன்றுமே இல்லாமலாகி அன்பிலே கரையணும்
என்னும் போது கனத்துக்கு இடமே இல்லை!ரொம்பவும் லேசாக அது இவனை ஆக்கி விடும்.
உத்தம அதிகாரிக்கே
எத்தனை வர்ணம் பண்ணினாலும் அது (பிரம்மம்) தன்னை விவரணம் என்பதாக
ரிலீஸ் பண்ணிக் கொண்டால் ஒழிய
கடைத்தேற முடியாது
என்ற நினைப்பில் அந்த லட்சியத்தின்
முன்னால் தாழ்ந்து கிடக்கும் நைச்ய பாவம் ஏற்பட பக்தியே உதவி பண்ணும். அந்த உச்சி அனுபவம் தான் என்றில்லை. இதுவரை சாதனையில் கண்ட
பலனெல்லாமும் பரமாத்மா அனுக்ரஹித்துக் கிடைத்தது தான்.
நாம் பண்ணினது முயற்சி மட்டுமே.பலன்
அது (பரமாத்மா) கொடுத்ததே.! அப்படி முயற்சி பண்ணத் தோன்றியதும் பண்ணிக் கொண்டே
போனதுங் கூட அதன்
அனுக்ரகத்தால் தான் என்ற நைச்ய பக்தி இருந்தாலே அடுத்தாற் போல ஸந்நியாஸியாவதற்கு
உடைமைகளை தியாகம் செய்ய வேண்டியிருப்பதில்
ரொம்ப முக்கிய உடைமையான அகம்பாவத் தியாகம் செய்ய முடியும்.
தெய்வத்தின் குரல்
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?