
வாழ்க த.நா.இ.பேப்பரின்
ஆசிரியர் குழுமம்
வளர்க அவர் தம்
அளப்பரிய பணி!
எதையும் பாஸிட்டிவ் வாக தொடங்கும் போது ஒரு உத்வேக சக்தி நமக்குள் ஊற்றெடுப்பது உண்மை தானே?
அத்தகைய அற்புத
சக்தியை தமிழ் நாடு இ பேப்பரை வாசிக்கும் போது நமக்கு கிட்டுகிறது என்பது உண்மை. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இத்தகைய புத்துணர்வை நித்தம் நித்தம் பெற்று வருகிறோம்.
இதற்கு தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தினருக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம்.
புதுக் கவிதை விரும்பியான நான்
அனைத்துக் கவிதைகளையும் படித்து ஆனந்தம் அடைந்தேன்.
கவிஞர் த.அனந்தராமன்
எழுதிய மறு மலர்ச்சி வேண்டும் என்ற கவிதை என்னை மிகவும் ஈர்த்தது.
மாணவர் சமுதாயத்தை மையமாக வைத்து படைக்கப் பட்டிருந்தது
தனிச் சிறப்பு.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வெளியாகி இருந்த எல்லை காந்தி என்று பிரியமாக அழைக்கப் பட்ட
கான் அப்துல் கப்பார் கான் வரலாறு பல தகவல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. சபாஷ் சார்.
தமிழ் நாடு இ பேப்பரின் பகுதிகளில்
தினம் ஒரு தலைவர்கள் சூப்பர் சூப்பர்!
ஆசிரியர் குழுமத்தினரை மனந்திறந்து பாராட்டி மகிழ்கிறோம்.
ஒரு கோடி வாசக நட்புகளின் இணைப்பை விரைவில் பெற்றிட இறைவனை வேண்டுகிறோம்.
பி.சிவசங்கர்
வடவள்ளி
கோவை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?