
இந்தியக் கடற்படையில் பயிற்சி பெற்ற போர் விமானியாக முதல் பெண் ஆஸ்தா பூனிகா .வாழ்த்துகள்.
விண்வெளியில் 6 பேர வலம் வரும் காட்சிப் படம் அருமை
பொன்வெளி வீதி முற்றும் வரப் போகிறது என நினைத்தால் தொடரும் வந்தது. சந்தோஷ் “மாமா அதில் ஒரு சிக்கல்” னு சொன்னதுமே சரி தொடரப் போகிறது என நினைச்சு கீழே பார்த்தால்
தொடருமே தான்.
புதுக் கவிதை சிறுகதை கருத்தும் சரி எழுத்தும் சரி
சிறப்பில்லை.
பயணிகளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி அறிமுகம் மக்களுக்கு மிக வசதி . இல்லையென்றால் ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் ஒரு செயலி குழப்பமே.
சிறு குழந்தைகள் பெரும்பாலோர் கண்ணாடி அணிகிறார்களே ஏனென்று பல காலமாக சிந்தனை தோன்றும். காரணம் சரியான தூக்கமின்மை என்பது மருத்துவ உண்மை வெளி வந்தபின் தான் புரிகிறது.
உலக அளவில் நல்ல உணவு கிடைக்கும் 100 நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 75 வது இடம் . பெருமை தான்
சிவ.சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?