வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)


  வளர்மதி ஆசைத்தம்பியின் 'சகிப்பு' என்ற சிறுகதை படித்து மகிழ்ச்சியடைந்தேன். பாடாய் படுத்திய மாமியார் பாசமுள்ள மாமியாராக மாறியதற்கான காரணம் நியாயமானதுதான். அந்த நல்ல மாமியாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு இந்த நல்ல கதையை எழுதிய வளர்மதி ஆசைத்தம்பிக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


  ஹரணியின் 'மனமே மாமருந்து' சிறுகதையை படித்தேன். இயல்பான வாழ்க்கையை சொல்லும் கதை. எந்தவித நெருடலோ வருத்தமோ தராத கதை. படித்து முடித்தபோது, அந்த வேலவன் வீட்டுக்கு நானே போய், அவர் கையால் ஒரு இஞ்சி டீ குடித்துவந்த உணர்வு ஏற்பட்டது. வயதான காலத்தில் ஒரு கணவன் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு இந்த கதை ஒரு நல்ல உதாரணம்.


  சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்' தொடர்கதையில் இலக்கியா காதல் தோல்வியால் படும் வேதனைகள் அதிக வருத்தத்தை தருகிறது. இலக்கியாவின் அம்மா சொல்லும் ஆறுதலான வார்த்தைகள் மனதை கொஞ்சம் சமாதானப் படுத்தினாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த தொடர்கதை காதல் தோல்வியில் வருத்தத்தில் இருக்கும் பெண்களின் மனநிலையை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கிறது.


  சுமதி முருகனின் 'ஒரு துளியின் பயணம்' என்ற கவிதை, திரும்ப திரும்ப ஒரு வட்டத்திலேயே சுற்றி வரும் நீரின் பயணத்தை சிறப்பாக சொல்லி, இயற்கையின் விந்தையை நினைத்து வியக்க வைத்தது.


  'நல்பொன்மொழி தான் நம் பாக்கெட்டில் இருக்கும் பொன்தான்...' என்ற அ.ராஜாரகுமானின் பொன்மொழி தொகுப்பு மிகச்சிறப்பு. பயனுள்ள சிந்தனைகளை தரும் பொன்மொழிகளாகப் பார்த்து தொகுத்திருப்பது பாராட்டும்படி இருக்கிறது.


  ராதா பாலுவின் 'புன்னகை என்ன விலை!' என்ற கட்டுரை எப்போதும் புன்னகை முகத்துடன் இருப்பதின் சிறப்பை, பயனை மிகச் சிறப்பாக உணர்த்தியது. 'எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் மனம் திறந்து மகிழ்ச்சியாக சிரித்துப் பேசுங்கள். அனைவரும் உங்களை விரும்புவர். பிறரையும் சிரிக்க வைத்து நாமும் சிரித்து வாழ்வோம்' என்ற கருத்து மிகச் சரியானது.


  சத்துகள் நிறைந்த செவ்வாழைப்பழம், தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம், பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்? ஆகிய பன்முகம் பகுதி கட்டுரைகள் வாழ்க்கைக்கு பயன்தரும் கட்டுரைகளாகும்!


  சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%