
தமிழ்நாடு இ பேப்பர்.காம் அனைவருக்கும் இன்றைய பேசு பொருளாக உள்ளது. 733 நாட்களைக் கடந்து 30 லட்சம் +வாசக நட்புக்களுடன் தரமான நம்பர் 1 நாளிதழாக வெற்றிப் பயணத்தை நோக்கி. இப்பயணம் வெறும் துவக்கம்தான். வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம் என்று சிறப்பாக குறிப்பிட்டு, மூன்றாம் ஆண்டு பயணத்திற்கு உறுதுணையாக இருந்த பலரில் ஒரு சிலர் என்று குறிப்பிட்டு 342 நபர்களை அவர்களை கௌரவிக்கும் முகமாக புகைப்படங்களை வெளியிட்டு ஆசிரியர் குழுமம் அசத்தி விட்டது. நன்றிகள் பல. வாழ்க!
வளர்க!! என வாழ்த்துவோம்.
தொடர்ந்து பயணித்தால் இ பேப்பர் வரலாற்றில் தமிழ்நாடு இ பேப்பர் .காம் லிம்கா புத்தகத்திலும் (Limca Book of Records) கின்னஸ் புத்தகத்திலும் (Guinness world records) இடம் பெற்று சாதனை படைக்கும். சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
தொடர்ச்சியாக நானும் தமிழ்நாடு இ பேப்பரும் போட்டி 01 பரிசு பெறுபவர்கள் விவரங்களையும் வெளியிட்டு, 54 போட்டியாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது இ பேப்பர்.
பவானி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவம் மூலம் பக்கவாத நோயாளிகளுக்கு 'பொடி திமிர்தல்' சிகிச்சை உட்பட 15 வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்ற செய்தி நோயாளிகளுக்கு நம்பிக்கைத் தரும். மூலிகைத் தோட்டம் அமைத்து பராமரித்தல்,
இஞ்சி ஒற்றடம்
போன்றவை சிறப்புக்குரியன. இவற்றிற்கெல்லாம் தலைமை வகிக்கும் மருத்துவர் எஸ்.கண்ணுசாமி தமிழக அரசின் சித்த மருத்துவர் விருதினையும் பெற்றுள்ளார் என்பது பாராட்டுக்குரியது.
நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் துவண்டுவிடாது மாற்றுத்துறையை தேர்வு செய்து, இன்று ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை. கர்நாடக மாணவி ரிதுபர்ணாவுக்கு வாழ்த்துக்கள். வாழ்க! இவ்வாறு ஒவ்வொருவரும் தோல்விகண்டு துவளாமல் மாற்றி யோசிக்கவேண்டும்.
எஸ் .அப்துல் ரஷீத்.
தஞ்சாவூர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?