அன்புடையர்,
வணக்கம் 7/7/25 அன்று தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் உலக வளர்ச்சிக்கு தெற்கு உலகின் குரல் ஏன் முக்கியம் என்ற வரிகளைப் படித்தவுடன் நம் நாட்டின் அரசியல் மிகத் துல்லியமாக சொல்லப்பட்டது உணர்ந்தேன். திருச்செந்தூர் கோவிலில் கூட உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இன்று பஞ்சாங்கம் எனக்கு நல்ல நாளாக உணர்த்தியது .
திருக்குறளை அதன் பொருளுடன் படித்து ரசித்தேன். மிகவும் அருமையான குறளும் பொருளும் மனதுக்கு சந்தோஷத்தை கொடுத்தது காட்பாடி ஸ்ரீமத் ஆஞ்சநேயர் தங்க கவசத்தில் பக்தர்களுக்காக அருள்பாளித்தது நல்ல செய்தி பாராட்டுக்கள்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் மூட்டுவாத பாதிப்புகளுக்கு என் நறுமண சிகிச்சையால் தீர்வு செய்யலாம் என்று ஆய்வு தகவல் நல்ல தகவல். பாராட்டுக்கள். கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைகளும் செல்லும் என்ற தமிழக அரசின் விளக்கம் மிகவும் அருமை பாராட்டுக்கள் .
இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்கள் பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டம் என்ற செய்தி நல்ல அமெரிக்க இந்திய பொருளாதாரத்தை விளக்கியது. உங்களுடன் ஸ்டாலின் என்று திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் அவர்கள் ஜூலி பயணம் தான் தேதி தொடங்கி வைக்கிறார் என்பது நல்ல தகவல்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் எல்.கே துளசிராம் அவர்களின் வரலாறும் புகைப்படம் மிகவும் அருமை பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் பக்கத்தில் வந்த அனைத்து செய்திகளும் மிகவும் அருமை ரசித்து படிக்க வைத்தது ஜோக்ஸ் மிகவும் அருமை பாராட்டுக்கள் ..
பன்முகம் பக்கத்தில் வந்த குழந்தைகளின் காலை போதை எப்படி தொடங்க வேண்டும் என்பது என் குழந்தை வளர்ப்பவர்களுக்கு ஒரு நல்ல அறிவுரை பாராட்டுக்கள்.
பதினாறாம் பக்கத்தில் வரும் ஆன்மீக தகவல் ஒவ்வொன்றும் அந்தந்த இடங்களுக்கே என்னை அழைத்துச் செல்வதுதான் மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
சுற்றுலா பக்கத்தில் வந்த வலிமையும் அழகும் நிறைந்த ஆலம் புறக்கோட்டை நல்ல தகவல் வரலாற்று செய்தியாக மனதுக்குள் பதித்துக் கொண்டேன். சுப்பிரமணிய சுவாமி கோவில் என்று கும்பாபிஷேகம் விழா கோலம் போன்றது திருச்செந்தூர் என்ற செய்தி என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு என்ற மத்திய அரசின் அறிவிப்பு அரசியலை மிக அழகாக துல்லியமாக சொல்லியது.
விளையாட்டு செய்திகள் விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் உண்மை. நல்ல நல்ல தகவல்களை படங்களுடன் கொடுப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் வெள்ளத்திற்கு 32 பேர் பலி என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து போட்டு விட்டேன் என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அவர்கள் சொன்னது அமெரிக்கா அரசியலில் நன்றாக புரிய வைத்தது .
20 பக்கங்களிலும் அருமையான தகவல்களை மிகத் துல்லியமாக அழகாக கொடுத்து எனக்கு உற்சாகம் கொடுக்கும் ஒரு விடியலை அமைத்துக் கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்து ராமன்