அன்புடையீர்,
வணக்கம் 31/7/ 25 அன்று தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியை நேரில் பிரசூதித்தது அருமையாக இருந்தது. பாராட்டுக்கள் இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக இலக்க அமைய உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அழகான திருக்குறளை அருமையான பொருளுடன் படித்து அதன் விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள். பெண் குழந்தைகளுக்கு பெண் பயிற்சியாளர்களை வேண்டும் என்பது உண்மையான செய்தி. அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று எண்ண வைத்து செய்தி. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஒரு பயனாளிக்கு நல திட்ட உதவி என்று படத்துடன் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அழகாக சொன்னது ஒரு பெரியவரிடம் அறிவுரை கேட்டது போல மகிழ்ச்சியாக இருந்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள் சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறக் கொடிக்கு எதிரான வழக்கு தவெக பதில் மனு தாக்குதல் என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது .
தேவையான இழப்பீடு வழங்காததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் சொன்னது விநாயகர் சதுர்த்தி வரப்போவதற்கான அச்சாரமாக எண்ணி மகிழ்வுடன் படித்தேன்
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த சந்திரசேகர ஆசாத் வரலாறு மிகவும் அருமை. மீசையை முறுக்கு அவருடைய வண்ண படத்தை பார்த்த போது ஒரு சுதந்திர உணர்வு வந்தது உண்மை.
பல்சுவை களஞ்சியம் மிகவும் அருமை மீம்ஸும் விடுகதையும் ஜோக்ஸும் எத்தனை முறை படித்தாலும் அழுக்காத ஒரு அருமையான பகுதியாக உள்ளது.
வாங்க சம்பாதிக்கலாம் பகுதியில் வந்து அனைத்து தகவல்களும் மிகவும் அருமை. சுய தொழில் என்ன செய்யலாம் என்று படித்தது சுயமாக தேர்வு செய்பவர்களுக்கு ஆர்வமாக இருக்கும்.
சென்னை சோழங்கநல்லூர் என்ற இடத்தில் உள்ள ஆடிப்பூரத்தை முன்னிட்டு பொங்கல் வைத்து குத்து விளக்கு பூஜை சிறப்பு வழிபாடு செய்த படமும் செய்தியை மிகவும் அருமை. ஸ்ரீ மாணிக்க நாச்சியார் அம்மன் கூ. வார்த்தல் திருவிழா மிகவும் அருமையான தகவல் பாராட்டுக்கள்.
சுற்றுலா பக்கத்தில் வந்த சென்னையில் இருந்து பாரதியார் இறுதி பயணங்களில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்று இரண்டாம் பகுதியாக பிரசரித்தது மிகவும் அருமையான தகவல். பாராட்டுக்கள். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி என்ற செய்தி பார்க்கும் போது உடலும் உள்ளமும் புல்லரித்தது.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இந்தியப் பொருள்களுக்கு 25 சதவிகிதம் இறக்குமதி வரி என்று அது அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் அறிவித்தது அதிர்ச்சியான செய்தியாக இருந்ததுர பாஜக மாநில நிர்வாகிகள் அறிவிப்பு என்று நடிகை குஷ்பு உட்பட 14 பேர் துணை தலைவர்களாக நியமனம் செய்த செய்தி அரசியல படம் பிடித்துக் காட்டியது.
இதுவரை வங்கிகளில் கோரப்படாத வைப்புத் தொகை ரூபாய் 67 003 கோடி என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நிலசரிவு சீரமைப்பு பணி துவங்கியது என்று செய்தி மழையை படம் பிடித்துக் காட்டியது..
ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி சீனாவுக்கும் எச்சரிக்கை என்ற செய்தி கடல் சீற்றத்தை படம்பிடித்து காட்டியது. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்தியாக மீண்டும் ட்ரம்ப் அவர்கள் கூறும் செய்தி படித்த அதிர்ச்சியாக இருந்தது .
எல்லா பக்கங்களிலும் அல்வா போன்ற தித்திக்கும் செய்தியை கொடுத்து புதிய விடியலை சந்தோசமாக தொடங்க உதவிய தமிழ்நாடு இ-பேப்பரின் ஆசிரியர் குழுயத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி
உஷா முத்துராமன்