வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 05.09.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 05.09.25


அன்புடையீர் 

வணக்கம். 5.9.24 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் காம் முதல் பக்கத்தில் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் சொன்னது மிகவும் அருமை அனைத்து குழுத்திற்கும் ஓணம் பண்டிகை மற்றும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக அமைய எனக்கு உதவியது.


திருவிளையாடல் நாயகரின் விளையாடல் கையில் யாழ் என்ற படமும் செய்தியும் அந்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்று விட்டது. நல்ல அற்புதமான தகவலும் படமும் மனதுக்கு நிறைவே கொடுத்தது பாராட்டுக்கள்


நாம் எந்த ஐந்து அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் என்று நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்தவுடன் ஒரு விழிப்புணர்வு வந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


எட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணையினை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிய செய்தி மிகவும் அருமை.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பகத்சிங் வரலாறும் அவருடைய புகைப்படமும் மனதுக்குள் ஒரு சுதந்திர உணர்வை கொடுத்து அவருக்கு ஒரு ராயல் சல்யூட் செய்ய வைத்தது பாராட்டுக்கள்.


பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த வீணை பற்றி படித்தது புல்லரித்தது.

 மீம்ஸ் மிகவும் அருமை பலமுறை பார்த்து என்னை மறந்து சிரித்தேன் .


தெய்வீக ஆருத்ரம் ஆன்மீகம் நல்ல நல்ல தகவல்களை தருவதால் ஆர்வமுடன் அந்த பக்கத்தை படித்து ரசித்தேன்.


பிட்டு திருவிழா நிறைவு என்ற படமும் அதன் காட்சி மிகவும் அருமை திருவண்ணாமலை அண்ணாமலை யாரின் கோயில் காணிக்கை புதிய உச்சம் என்று அங்கு கணக்கை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது பாராட்டுக்கள்.


சுற்றுலா பகுதியில் இந்தியாவின் டாப் 10 அனுமானுஷ்ய வியப்புடன் படிக்க வைத்தது கண்டிப்பாக இவற்றையெல்லாம் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று எண்ணம் மேலிட்டது .


ஒகேனக்கல் காவிரி ஆற்றின் பரிசல் இயக்க அனுமதி என்ற செய்தி நல்ல தகவல் பாராட்டுக்கள்


பற்றி எரியும் இந்தோனேசியா பிங்க் உடையில் போராட்ட களத்தில் குதித்த பெண்கள் பின்னணி யார் என்ற செய்தியெல்லாம் அமெரிக்காவில் நடக்கும் செய்தியை மிக அற்புதமாக படம் பிடித்து காட்டியது.


எல்லா பக்கங்களும் அனைத்து செய்திகளும் மிகவும் புதிய தகவல்களாக இருந்ததால் ஆர்வமுடன் ரசித்து படித்து மகிழ்ந்தேன். இந்த பணியை ஆர்வமுடன் செய்யும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


 நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%