வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்),(10.07.25)

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்),(10.07.25)



அன்புடையீர்,


வணக்கம் 11.7.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் நம் பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கு நம்பியாவின் உயரிய விருது கொடுத்தது பெருமையாக இருந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான தகவலை எனக்கு சொல்லி வியாழக்கிழமை வீடியோ வைத்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


திருக்குறள் மிக அருமையாக இருந்தது. அதைப் பொருளுடன் படிக்கும் போது மனம் மகிழ்ந்தது. புனித அந்தோனியார் ஆலய ஆண்டுப் பெருவிழா என்று கிறிஸ்துவ மதத்தில் நடக்கும் நல்ல சம்பவங்களையும் பிரசூரித்து அனைத்து மதத்தினரையும் மதிக்கும் தங்களுடைய பண்பாடுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


புதுச்சேரியில் பந்து கடைகள் அடைப்பு தனியார் பேருந்துகளோட வில்லை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அங்கு நடப்பதை தெளிவாக சொன்னது பாராட்டுக்குரியது. நாம் தினமும் தண்ணீர் குடிக்கும் முறை சரியா என்று ஒரு கேள்வியும் கேட்டு அதற்கான பதிலையும் நலம் தரும் மருத்துவம் பகுதியில் சொன்னது அருமை பாராட்டுக்கள்.


கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கோவை மக்களுக்கு ஆட்சியர் தரும் அலர்ட் குறிப்புகள் என்று ஆரோக்கியத்தை முதலிடம் கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் ஏ எஸ் கே வரலாறு மிகவும் அருமை புதுமையான தலைவர்களை பற்றி அழகாக சொல்லும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


பல் சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அற்புதம் மீம்ஸ் பலமுறை பார்த்து ரசித்து சிரிக்க வைத்தது. வாங்க சம்பாதிக்கலாம் என்று என்ன தொழில் செய்தால் எப்படி லாபம் கிடைக்கும் என்று அருமையான தகவலை சொன்னது பாராட்டுக்கள்.


புனிதவதி அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் என்று அங்கு நடந்ததை கண் முன்னே கொண்டு வந்து காட்டிய படங்களும் செய்தியும் மிகவும் அருமை மனம் நிறைந்த பாராட்டுக்கள். செல்லியம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு திருவிழா என்று படத்தை பார்க்கும் போது உடலும் உள்ளமும் புல்லரித்தது .


சுற்றுலா பக்கத்தில் வந்த விளையாட்டுகளுக்கு ஏற்ற திருவான்மியூர் கடற்கரை என்று படத்துடன் பார்க்கும்போது அந்த கடற்கரைக்கு நான் சென்ற நாட்கள் என் மலரும் நினைவாக வந்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். பேரவை தேர்தலில் இருமுனைப் போட்டியே நிலவும் என்ற திருமாவளவன் அவர்களின் கருத்து அரசியலை மிக அழகாக பிரதிபலித்தது.


குஜராத்தின் இரு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலம் இடிந்து விழுந்த படத்தை பார்த்தபோது மனம் வலித்தது. இதுபோன்ற பாலங்கள் ஏன் தான் இடிந்து விழுந்து மக்களுக்கு இன்னல்கள் கொடுக்கிறது என்று ஒரு மன வேதனை அடைந்தது. திரிபுராவில் கனமழைக்கு 118 குடும்பங்கள் பாதிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அங்கு மழை பெய்தது சொன்னது நல்ல தகவல்.


தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக பிரிட்டன் முன்னாள் பிரதமர் நியமித்ததை அயல்நாட்டு செய்தியாக ஆவலுடன் படிக்க வைத்தது. சீனா நேபாளம் எல்லையில் வெள்ளம் 9 பேர் 20 பேர் மாயம் தேடுதல் பணி தீவிரம் என்று அங்கு நடந்த மழையை பற்றி புரிந்து கொள்ள முடிந்தது.


அனைத்து பக்கங்களையும் அலைபேசியில் தள்ளித்தள்ளி ஆர்வமுடன் மெல்ல படித்து ரசித்தேன். தங்களுடைய இந்த பணி என்றென்றும் இதே போல் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%