வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)


 வணக்கம். 8.7.25 அன்று தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் ஜப்பான் மற்றும் தென்கொரியா பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்


இன்றைய திருக்குறளை பொருளுடன் படித்து மிகவும் மகிழ்ந்தேன். இந்த திருச்செந்தூர் குடமுழுக்கு விழா மிகவும் அருமையான தகவல் அதை மின்னொளி காட்சியாக பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் சர்க்கரை நோய் முதல் உடல் பருமன் வரை ஆளி விதைகள் தரும் நன்மைகள் என்று ஆளி விதையின் நன்மைகளைப் பற்றி படித்தது அதை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தீர்மானிக்க வைத்த செய்தி. 


அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது மருத்துவத் துறையை பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. ஜூன் மாதத்தில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிப்பு என்று சொல்லி நல்ல செய்தி பாராட்டுக்கள்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் என்.எம். பெரேரோ அவர்களின் வரலாறு புதிய செய்தியாக ஆர்வமுடன் படத்துடன் பார்த்து ரசிக்க வைத்தது.


பல்சுவைக் களஞ்சியம் பகுதியில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை.. மீம்ஸ் விடுவதையும் மிகவும் ஆர்வமுடன் பார்க்க வந்தது. சமையல் பலவித சமையல் டிப்ஸ்களை கொடுத்து எங்களையும் சமையலில் எக்ஸ்போர்டாக மாற்றும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


தூய பாத்திமா அன்னை திருத்தளத்தில் தேர்த்திருவிழா கண்கொள்ளா காட்சியாக இருந்தது. புண்ணிய கால உற்சவம் முதல் நாள் கொடியேற்றம் மிகவும் அருமையான செய்தி பாராட்டுக்கள்.


சுற்றுலா பற்றி வந்த சிற்பக் கலைக்கு உரித்தான கழுகு மலை செய்தி மிகவும் அருமை.. பழங்கால சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் இடமாக எண்ணி ஆவலுடன் படிக்க வைத்தது. திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம் என்று செய்து அருமை பாராட்டுக்கள்.


அந்நிய செலாவாணி கையிருப்பு 70, 278 கோடி டாலராக அதிகரிப்பு என்று படித்ததும் அந்நிய செலாவணி பற்றி தெரிந்நு கொள்ளும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அமர்நாத் யாத்திரை ஜம்முவில் இருந்து ஆறாவது குழு புறப்பட்டது என்று செய்தி நல்ல தகவல் பாராட்டுக்கள்


விளையாட்டு செய்திகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை.. விளையாட்டு பற்றி ஆவலுடன் தெரிந்து கொள்ள நல்ல நல்ல தகவல்களை எங்களுக்கு கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


வரலாறு காணாத மழையால் பெருவெள்ளம் என்று அமெரிக்காவில் 52 பேர் உயிரிழந்ததை பற்றிய செய்தியும் 27 பேரை காணவில்லை என்ற செய்தியின் வேதனையில் ஆழ்த்தியது. தலிப்பான் அரசை அங்கீகரிக்க அவசரம் இல்லை என்று பாகிஸ்தான் பற்றி படித்ததும் அயல்நாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது பாராட்டுக்கள்.


எல்லா பக்கங்களையும் நல்ல செய்திகளை தொகுத்து புதிய விடியலுக்கு அச்சாரமிடும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி

 உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%