வாசகர் கடிதம் (உஷாமுத்துராமன்) 08.09.25

வாசகர் கடிதம் (உஷாமுத்துராமன்) 08.09.25


அன்புடையீர் 


வணக்கம் 8 .9. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் அதை முதல் பக்கத்தில் வானில் தோன்றிய சந்திர கிரகணத்தின் வடிவங்களை பார்த்தவுடன் இரவில் உறங்கி விட்டோமே சந்திர கிரகணத்தை பார்க்க முடியவில்லை என்ற என்னுடைய ஏக்கத்தை போக்கியது. மிகவும் அற்புதமான படங்கள் பாராட்டுக்கள் இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள் .


திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன் மன நிறைந்த பாராட்டுக்கள். நலம் தரும் மருத்துவம் பகுதியில் உடல் ஆரோக்கியத்திற்கு பூசணி விதையை சாப்பிட வேண்டும் என்றும் அதனால் கிடைக்கும் 10 பலன்கள் மிகவும் அருமை மனம் நிறைந்து பாராட்டுக்கள்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வரும் துரைசாமி அவர்களின் வரலாறும் வண்ணப் படமும் மிகவும் அருமை.


பசுவை களஞ்சியம் பகுதியில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை ஜோக்ஸ் இருக்கிற ரசித்து சிரிக்க வைத்தது. பன்முகம் பகுதியில் வந்த குழந்தைகளின் பிடிவாதம் பெற்றோர் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை இன்றைய காலத்திற்கு அனைவருக்கும் பயனுள்ள தகவல் Vlog நிறைந்த பாராட்டுக்கள்.


 உலக எழுத்தறிவு தினம் 2025 என்று உலக எழுத்தறிவு தினத்தை பற்றி படித்ததும் பெருமையாக இருந்தது பாராட்டுக்கள் .


சுற்றுலா பக்கத்தில் வந்த கட்டணம் இல்லாத ஆன்மிக பயணம் தகுதி விண்ணப்பிப்பது எப்படி என்ற செய்தி பலருக்கும் பயனுள்ள தகவல் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி 15 முக்கிய ரயில்களின் சேவை மாற்றம் என்பது நல்ல தகவல் பாராட்டுக்கள்.


மிகவும் மோசமான வெள்ள பாதிப்பு என்று பஞ்சாபில் பிரதமர் மோடிஜி அவர்கள் சென்று பார்க்கப் போகிற சண்டிகர் பற்றிய செய்தி அதிர்ச்சியாக இருந்தது.


ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றது மிகவும் நல்ல தகவல் இதனால் இந்த உலகத்திலேயே எங்கும் புற்றுநோய் என்ற அந்த கொடுமையான நோய் இல்லாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.


அனைத்து பக்கங்களிலும் நல்ல செய்திகளை மிக அழகாக தொகுத்துக் கொடுத்ததால் திங்கட்கிழமை விடியல் தித்திக்கும் விடியலாக அமைந்ததில் தமிழ்நாடு இ பேப்பரின் பங்கு மிக அதிகம் அதை மிக நேர்த்தியாக செய்யும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷாமுத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%