
'தேங்காய் பாலில் உள்ள சத்துகளும் அதன் பயன்களும்' என்ற கட்டுரை நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்தேன். தேங்காய் பாலின் சிறப்பை, அதன் மருத்துவ பயனை விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லியிருந்த விதம் பாராட்டும்படி இருந்தது.
முகில் தினகரனின் 'அந்த மனசுதான் கடவுள்' என்ற சிறுகதை, சாதாரண வேலைபார்க்கிற தாமு என்ற மனிதருக்கு இருக்கும் தன்னலமில்லாமல் உதவி செய்யும் மனப்பான்மையை அழகாக படம்பிடித்துக் காட்டியது. அந்த தாமுவின் எதிர்பாராத மரணம் ஜோதிக்கு மட்டுமல்ல; எனக்கும் அதிர்ச்சியாகதான் இருந்தது!
'உலகின் முதல் அணைக்கட்டு..கரிகாலன் கட்டிய கல்லனை' என்ற சிவசக்தியின் கட்டுரை பழந்தமிழர்களின் தொழிற்நுட்ப அறிவை பறைசாற்றியது. இந்த கட்டுரையை படிக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு அணையை எப்படி கட்டினார்கள் என்ற வியப்பை ஏற்படுத்தியது. கட்டுரை மிக சிறப்பாக, அதன் பெருமையை உணர்த்தும் வகையில் இருந்தது பாராட்டும்படி இருந்தது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெரும்பாலோருக்கு தெரியாத தியாகிககளை பற்றியெல்லாம் கூட தெரிந்துக்கொள்ள முடிவது ஒரு நல்ல விஷயம்தான். குட்டிமாலு என்ற சுதந்திரப்போராட்ட வீராங்கனை தன்னுடைய இரண்டு மாத கைகுழந்தையுடன் சிறைக்கு சென்றது மனதை நெகிழவைத்தது.
முனைவர் இராம வேதநாயகம் 'எறும்பு...எறும்பு!' என்ற கவிதையில் எறும்பின் சிறப்பை மிக அழகாக விவரித்திருந்தார். இங்கே அமெரிக்காவில் பியோரியா என்ற நகரத்தில் இருக்கும் Zoo வுக்கு நேற்று சென்றிருந்தேன். இங்கே சிங்கம், புலி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகள் இருந்தாலும் ஒரு அறையில் விதம் விதமாக எறும்பு பொம்மைகளை வைத்திருந்தார்கள். அதோடு, ஆங்காங்கே 'கூட்டில் உள்ள எறும்புகளில் ராணி எறும்புதான் மிகப்பெரியது. ஆண் எறும்புகளுடன் தனது பழைய வீட்டிலிருந்து பறந்து செல்லும்போது அது ஒரு புதிய கூட்டைத் தொடங்குகிறது. குடும்பத்தில் முட்டையிடும் எறும்புகள் ராணி எறும்புகள் மட்டுமே. சில ராணி எறும்புகள் ஒரே நாளில் இரண்டாயிரம் முட்டைகள்வரை இடும். சில எறும்புக் கூட்டங்களில் ஒரு லட்சம் எறும்புகள் வரை இருக்கும்' என்றெல்லாம் எறும்புகளை பற்றிய தகவல்களை ஆங்கில மொழியில் அச்சிட்டு சுவற்றில் ஒட்டியிருந்தார்கள். இராம வேதநாயகத்தின் எறும்பு பற்றிய கவிதையை படித்தபோது, இது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?