
' இதுவரை பாஜகவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே மாறிவிட்டார் " என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகிறார்.
எடப்பாடியார் பாஜகவின் அங்கமாகவே மாறியது போல பேசுவது அவருடைய நிர்பந்தம். அது என்ன என்று அவருக்கும் பாஜக மேல் இடத்துக்கும் மட்டுமே தெரியும்.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறப் போகிறது. அதற்காக சிறப்பு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
வாக்காளர்கள் அனைவரும் தான் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் பட்டியலில் ஆதார் கார்டு நீக்கப்பட்டு இருக்கிறது.
ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
தேர்தல் ஆணையத்தின்
வாதம் ஒரு விதத்தில் சரியானதே! அண்டை
நாடுகளில் இருந்து ஊடுருவி
சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பண
பேராசை கொண்ட அரசுப்
பணியாளர்கள் மூலம் போலியாக ஆதார் கார்டுகளை பெற்று விடுகிறார்கள்.
எனவே ஆதார் கார்டுகளின் உண்மை தன்மையே சோதிக்க வேண்டியது கட்டாயம். அதை முன்பே செய்திருக்க வேண்டும்.
தேர்தல் வரப்போகும் நேரத்தில் அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்வது சந்தேகத்தை உண்டாக்குகிறது.
உக்ரைன் நாட்டுக்கு ஆயுத
உதவி செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். கடந்த வாரம் தான் ராணுவ தளவாட உதவிகளை நிறுத்தப் போவதாக கூறியவர் இந்த வாரம் ஆயுத உதவி அளிக்கப் போவதாக பேசுகிறார்.
ட்ரம்ப் ஒவ்வொரு தினமும் ஒரு மாதிரி பேசுகிறார். அவரது பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. இப்படி மாறி மாறி பேசிக் கொண்டிருப்பவர் எப்படி உலகின் பெரிய ஜனநாயக நாட்டிற்கு தலைமை பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவார் என்பது சந்தேகமாக இருக்கிறது.
********
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?