வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாள் சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் மஹா சம்வத்ஸரா அபிஷேக 108 சங்காபிஷேகம்
Nov 28 2025
19
வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாள் சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் மஹா சம்வத்ஸரா அபிஷேக 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாள் சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் மஹா சம்வத்ஸரா அபிஷேக 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமிக்கும் அன்பாளுக்கும் மஹா சம்வத்ஸரா அபிஷேக 108 சங்காபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கும், சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்வுக்கு பீடாதிபதி சங்கர நாராயணி பீடம் ஸ்ரீ ஸ்ரீ சங்கர தீர்த்த சுவாமிகள் வருகை புரிந்தார், அவர் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும் வழங்கி ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இவ்வாலய மஹா சம்வத்ஸரா அபிஷேக 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்தை ஆதிச்சமங்கலம் ஜெய. இளங்கோவன் மற்றும் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?