வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள்

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள்



பொள்ளாச்சி, ஜன.- ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்காலத் திற்கு பிந்தைய வனவிலங்கு கள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை ஆகிய நான்கு வனசரகத்தில் புதனன்று முதல் ஜன.13 வரையிலான ஏழு நாட்கள் வனவிலங்குகள் கணக்கெ டுப்பு பணிகள் துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர், வன வர், வனக்காப்பாளர், வனக் காவலர், வேட்டை தடுப்பு காவலர், வன உயிரியலாளர் என ஆறு பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறுகையில், முதல் மூன்று நாட்கள் புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளை அதன் காலடி தடம், எச்சம், நக கீறல்கள் போன்றவற்றை வைத்து நேர்முகமாகவும், மறைமுக மாகவும் கணக்கெடுக்கப் படும். அடுத்த மூன்று நாட் கள் மொத்தம் உள்ள நான்கு வனசரகத்திலும் ஊன் உண்ணிகள் பயணிக்கும் மற்றும் இறை விலங்குகள் வாழும் 62 நேர்கோட்டு பாதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு மான், குரங்கு, தாவர உண்ணிகள் போன்றவை கணக்கெடுத்து, அவைகள் வாழ தகுதியான புல் போன்ற தாவரங்கள் போதிய அள வில் உள்ளதா உள்ளிட்டவை கண்டறியப்பட்டு பதிவு செய் யப்படும். ஏழாவது நாள் பிணம்தின்னி கழுகுகள் உள்ளனவா போன்ற ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கையை வனத் துறை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும், என்ற னர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%