கோவை, ஜன.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதான வளாகம், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காந்தி மாநகர், மாநகராட்சி விளையாட்டு மைதான வளாகம், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவைப்புதூர் ஏ கிரவுண்டு மைதான வளாகம் மற்றும் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வ.உ.சி. மைதான வளாகம் ஆகிய 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா ஜனவரி 14 புதன் கிழமை அன்று நடைபெற உள்ளது.
மேலும், இந்த சமத்துவ பொங்கல் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பானைகள் கொண்டு பொங்கல் இடுதல், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை கொண்டாடிடும் வகையிலான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டி, உறி அடித்தல் போட்டி, இசை நாற்காலி போட்டி, கயிறு இழுத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
மேற்காணும் சமத்துவ பொங்கல் திருவிழாவில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், குடியிருப்பு நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?