வந்தவாசியில் நாட்டியாஞ்சலியுடன் தொடங்கிய ஸ்ரீ வைணவ மாநாடு
Dec 14 2025
13
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீ வைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீ ராம பஜனை மந்திர கைங்கரிய டிரஸ்ட் இணைந்து நடத்திய சிறப்பு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு ஆரணி ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் எஸ்.குமார், விமலா ஜுவல்லரி எஸ்.பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க நிகழ்வாக,
ஸ்ரீ கிருஷ்ண லீலாமிர்த பஜனை குழு சார்பில் திருநாம சங்கீர்த்தனம் பஜனை நிகழ்வு நடைபெற்றது. பிறகு வள்ளியூர் ஸ்ரீ வைஷ்ணவ நாட்டியாலயா பரத குழு சார்பில் பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் கும்பகோணம் டாக்டர் உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் அவர்களால் 'பால லீலையும், பாரத லீலையும்' என்ற தலைப்பில் சிறப்பு உபன்யாசம் (சொற்பொழிவு) நடைபெற்றது. இந்த வைபவத்தில் வந்தவாசி வட்டாட்சியர் சம்பத் குமார், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி தலைவர் மு.ரமணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 750 க்கும் மேற்பட்ட பாகவத கோஷ்டிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?