வடக்கு காசாவை ஆக்கிரமித்து கட்டடங்கள் இஸ்ரேல் அமைச்சர் காட்ஸ் அறிவிப்பு
Dec 27 2025
11
வடக்கு காசாவை ஆக்கிரமித்து அங்கு புதிய கட்டடங்களை இஸ்ரேல் கட்டமைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு இஸ்ரேல் சுமார் 857 முறை அவ்வொப்பந்தத் தை மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள் ளது. இந்நிலையில் தான் வடக்கு காசாவை ஆக்கிரமிக்கப்போவதாக இஸ்ரேல் அமைச்சர் பேசியுள்ளார். வடக்கு காசா பகுதியில் ராணுவ-விவ சாய புறக்காவல் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும் காட்ஸ் அறிவித்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு காசாவிலிருந்து இஸ்ரேல் பகுதிக்குள் 21 குடியிருப்புகள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றுக்கு பதி லாக இந்த புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என கூறியுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்ன தாகவே காசா கடற்கரைப் பகுதியை ரியல் எஸ்டேட் தொழிலுக்காக ஆக்கிரமிக்கப் போகிறேன் என டிரம்ப் பேசி இருந்தார். இஸ்ரேலும் காசா பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலைகளை துவங்கி இருந்தது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக அப்பகுதிகளில் இஸ்ரேலின் ராணுவம் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது இஸ்ரேல் ராணுவம் காசாவிலிருந்து முழுமை யாக வெளியேற வேண்டும் என்ற போர் நிறுத்த ஒப்பந்த நிபந்தனைக்கு எதிரான தாகும். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிகாரிகள் இதற்கு கடும் அதிருப்தியைத் தெரிவித்ததுடன் விளக்கமும் கோரினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் காட்ஸ் தனது கருத்திலிருந்து பின்வாங்கினார். இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இவ்வாறு பேசுவதற்கு முன் காசா ஊடக அலு வலகம் ஒரு முக்கிய தகவலை வெளி யிட்டது, அதில் அக்டோபர் 10 முதல் இதுவரை இஸ்ரேல் சுமார் 875 முறை பல்வேறு வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இந்த சமயத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 411 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 70,942-ஐக் கடந்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?