பொங்கலுக்கு பிறகு வலுவான கூட்டணி உருவாகும்: நயினார்

பொங்கலுக்கு பிறகு வலுவான கூட்டணி உருவாகும்: நயினார்



பொங்கலுக்கு பிறகு வலுவான கூட்டணி உருவாகும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்கிற சுற்றுப் பயண யாத்திரையை நேற்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற் கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:-


100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறினார். ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கினர்.ஆனால், பிரதமர் மோடி 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளார். இதே போல், தி.மு.க. தேர்தல் அறிக்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி செவிலியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், இப்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்த அறிக்கையில் கவர்ச்சி திட்டங்கள் இருக்காது என கனிமொழி கூறியுள்ளார்.


தமிழகத்தில் நடப்பது போலியான ஆட்சி. கஞ்சா, நவநாகரிக போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக புழுங்குகிறது.பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பொங்கலுக்கு பிறகு பெரிய வலுவான கூட்டணியாக உருவாகும். நல்லதே நடக்கும் என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%