லண்டனில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர அவசரமாக தரையிறக்கம்

லண்டனில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர அவசரமாக தரையிறக்கம்


  

ஐதராபாத்,


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் ஐதராபாத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.


இந்நிலையில், விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்த நிலையில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


இதையடுத்து, விமானம் ஐதரபாத் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மீண்டும் லண்டன் புறப்பட்டு சென்றது. அதேவேளை, விமானத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%