லட்சுமி பாட்டி

லட்சுமி பாட்டி

லட்சுமி பாட்டி விடியற்காலை நேரம் ஜெயா வீட்டு வாசலில் கோலம் போட்டு வண்ணப்பொடி தூவிக் கொண்டிருந்தாள் .பால் கனியில் இருந்து லட்சுமி பாட்டி கோலத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தான் அந்த வீட்டுக்கு சொந்தக்காரி. ஜெயா அந்த வீட்டின் கீழ் பகுதியில் வாடகைக்கு இருப்பவள். பாட்டி கோலம் எப்படி இருக்கு? என்று கேட்டாள் ஜெயா. பேஷ், பேஷ் ரொம்ப நல்லா இருக்குது. கோலத்தின் நடுவில் சாணி வைத்து அதன் மேல் பூசணி பூவை வை என்றால் பாட்டி. ஜெயாவும் அவ்வாறே செய்தால் கோலம் இப்பதான் பார்க்க சூப்பரா இருக்கு என்று சொல்லிக் கொண்டே பாட்டி உள்ளே சென்றாள் .பாட்டியின் பேரன் ராஜேஷ் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்பவன் .அவன் நைட் ஷிப்ட் முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்ப வந்தான் .நேராக அந்தக் கோலத்தின் மீது வண்டியை நிறுத்தினான். இறங்கும்போது ஷூ காலினால் கோலத்தை மிதித்தான். கோலம் கலைந்து விட்டது .அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விறுவிறு என்று மாடிப்படி ஏறி உள்ளே வந்து படுத்து தூங்க ஆரம்பித்து விட்டான். ஜெயா கேட்டில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் பையில் உள்ள பால் பாக்கெட்டை எடுப்பதற்காக வெளியே வந்தாள். அப்பொழுது அழகான கோலம் கலைந்து இருப்பதை பார்த்தாள். பூசணிப்பூவும் பைக்கின் சக்கரத்தில் நசுங்கி இருப்பதை கண்டாள்.அவளுக்கு மனது ரொம்ப வலிக்க ஆரம்பித்தது. வேதனையுடன் எவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு அழகாக இந்த கோலத்தை போட்டேன் .10 நிமிடத்தில் இப்படி கலைந்து விட்டதே! இது ராஜேஷின் வேலையாகத்தான் இருக்கும் .என்ன செய்வது ?ஹவுஸ் ஓனரோட பேரனாயிற்று எப்படி கேக்க முடியும்? ஹூ ம்... என்ன செய்ய முடியும்? என்று முணுமுணு படியே பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றாள். சற்று நேரம் கழித்து லட்சுமி பாட்டி பால் கனியில் வேடிக்கை பார்ப்பதற்காக வந்து நின்றாள். அப்பொழுது கோலத்தின் மேல் பைக் நிற்பதை பார்த்துவிட்டு ராஜேஷ் ,..வண்டியை தள்ளி நிறுத்தக் கூடாதா? பார்... ஜெயா போட்ட அழகான கோலம் கலைந்து விட்டது என்றாள்.போ, பாட்டி இது ஒரு பெரிய விஷயம் என்று சத்தம் போடுற, நான் இல்லைனா வேறு ஒருவர் நடந்து போகும்போது இந்த கோலம் கலையத்தான் போகிறது, இல்லைனா சாயங்காலமா நீங்கள் பெருக்கி தள்ளி விடத்தான் போகிறீர்கள் இதற்காக என்னை திட்டுகிறாயே; எனக்கு தூக்கம் வருகிறது, என்னை தூங்க விடு என்று பதில் சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டான். நீ செய்தது தவறு. அவளிடம் சாரி ...கேள் என்றாள் பாட்டி. அவன் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை . கொர்.... கொர்...என்ற சத்தம் தான் வந்தது. இந்த காலத்து பசங்களே இப்படித்தான் ஹூ ம்... காலை 10 மணி ராஜேஷ் எழுந்திருடா குளித்துவிட்டு வா சாப்பிடலாம் என்று எழுப்பினாள் பாட்டி. இதோ வருகிறேன் பாட்டி என்றான் ராஜேஷ் .அப்பொழுது தெருவில் குப்பை வண்டியின் பாட்டு சத்தம் ஒலித்தது .டேய் ராஜேஷ் எழுந்திருடா இந்த குப்பையை கொண்டு போய் கீழே உள்ள துப்புரவாளரிடம் கொடுத்துவிட்டு வா. எனக்கு முட்டி வலிக்கிறது .என்னால் படி ஏறி , இறங்கி போக முடியவில்லைஎன்றாள் பாட்டி .ராஜேஷ் எரிச்சலுடன் எழுந்தான். முனகிக்கொண்டே அந்த குப்பை இருந்த பிளாஸ்டிக் பையை பால்கனியிலிருந்து வண்டியின் மேல் எறிந்தான் .பிளாஸ்டிக் பை கிழிந்தது குப்பை பாதி வண்டியிலும் பாதி கீழேயும் கொட்டியது. துப்புரவாளர் ஏம்பா கீழே வந்து போட முடியாதா ?சின்ன வயசு பையன் தானே நீ , கொஞ்சம் கூட மரியாதை தெரியல உனக்கு என்றார். ராஜேஷ் உடனே துப்புறவாளர் தானே நீங்கள் கீழே உள்ள குப்பையையும் பெருக்கி சேர்த்து வண்டியில் போட்டு எடுத்துச் செல்லுங்கள் என்றான். துப்புரவாளர் என்றால் நீ மரியாதை இல்லாமல் இப்படி நடந்து கொள்வாயா? எந்த தொழிலையும் கேவலப்படுத்த கூடாது. நான் தினமும் வரவில்லை என்றால் தெருவே நாறிவிடும் ஜாக்கிரதை என்று கத்தி விட்டு சென்று விட்டார் .அதைக் கேட்டுக் கொண்டே வந்த பாட்டி ராஜேஷ் நீ செய்வது சரியில்லை யாரையும் தரக்குறைவாக பேசக்கூடாது. அவரிடம் மன்னிப்பு கேள் என்றாள் போ பாட்டி உனக்கு வேற வேலை இல்ல என்றான்.உன் குணத்தை மாற்றிக் கொண்டால் உனக்கு நல்லது இல்லை என்றால் பின்னாடி நீதான் கஷ்டப்பட போற என்றாள் பாட்டி. மாலை 5 மணி ராஜேஷ் புது பேண்ட் ,சர்ட் போட்டுக் கொண்டு டிப் டாப்பாக வேலைக்கு செல்ல கிளம்பினான். கீழே வந்து பைக்கில் அமர்ந்து பைக்கை ஸ்டார்ட் செய்தான். அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென்று காபி கலந்த நீர் ராஜேஷ் சட்டை மீது வந்து பட்டது. சட்டை நனைந்தது அவனுக்கு கோபம் வந்துவிட்டது யார் இந்த தண்ணியை என் மேல் ஊற்றியது என்று கத்தினான். நான் வேறு அவசரமாக ஆபீசுக்கு கிளம்பி கிட்டு இருக்கேன் என்ன பண்றது,? என்று சுற்று முற்று பார்த்தான். ஜன்னலில் இருந்து ஜெயா மெல்ல எட்டிப் பார்த்தாள் .ஐயோ! இப்படி ஆயிடுச்சே? என்றாள் .அவள் வெளியில் வந்து நீங்க இருக்கிறது தெரியாம கொட்டிவிட்டேன் என்றாள்.அதற்கு ஒரு சாரி கூட சொல்லத் தெரியாதா உனக்கு, திமிரு புடிச்சவ என்றான் ராஜேஷ். உடனே ஜெயாவிற்கு கோபம் வந்துவிட்டது நான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்கிறேன் ,ஆனால் நீங்கள் காலையில் வேண்டுமென்றே பைக்கை கோலத்தின் மீது நிறுத்தி கோலத்தை கலைத்தீர்களே அதற்கு என்ன செய்வது ?பாட்டி அவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க ஒரு சாரி கேட்டீங்களா? என்றாள் ஜெயா. இருவரும் சண்டை போடுவதை கேட்டுக்கொண்டே வந்த லட்சுமி பாட்டி ஜெயாவை சமாதானப்படுத்தினாள். உடனே ராஜேஷ் என்ன பாட்டி ...எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்குற, அவங்களை சமாதானப்படுத்துறீங்க என்றான். பாட்டி அ தற்கு " முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" நீயே யோசித்துப் பார் என்று சொல்லிவிட்டு ,மேலே வந்து வேறு சட்டையை மாற்றிக் கொண்டு ஆபீஸ்க்கு போ என்றாள் .



எம் .எல் .பிரபா,

ஆதம்பாக்கம்,

சென்னை 88

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%