
*ரோசாவின் ஆசை..!*
வாடவந்த பூவுக்கு..
வாழ்வதற்கு ஆசை.!
பாடவந்த குயிலுக்கு..
மௌனமாக ஆசை.!
ஓடுகின்ற காலத்திற்கு
நின்றுசெல்ல ஆசை..
உலகமாம் தோட்டத்து
ரோசாவின் ஆசையிது
உதிர்கின்ற போதிலும்
உயிர்பாடும் ஓசை..
எதுவரினும் ஏறப்பதுவே
ரோசாமலர் ஆசை.!
மொட்டுகளே அதிகாலை
மலரூங்கள் வாழ்வினிலே..
வெட்டினாலும் கட்டினாலும்
மணம் தந்து வாழுங்கள்..!
பனிமழையில் நனைகயிலும்..
இதழ்குளிர வேண்டுங்கள்..
பரவசமும் நறுமனமும் தரும்வரையில் தவழுங்கள்!
முள்ளிருக்கும் பாதையிலே..
கள்ளிருக்கும் ரோசாவே..
தொல்லைகளை ஏற்கயிலும்..
தூயமணம் தாருங்கள்...!
கல்லறையும் கருவறையும் ஒன்றுயென எண்ணுங்கள்.!
நல்லவிதம் நம்பிறப்பு.. நலம்காண பாடுங்கள்!
*வே.கல்யாணகுமார்.*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?