ரூ.3 கோடி மதிப்பீட்டில் “முதல்வர் படைப்பகம்” கட்டும் பணி: செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

ரூ.3 கோடி மதிப்பீட்டில் “முதல்வர் படைப்பகம்” கட்டும் பணி: செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர், ஜூலை 14


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின், "எல்லாருக்கும் எல்லாம்" என்ற திராவிடக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைக்கு வருவதாக சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “முதல்வர் படைப்பகம்” திட்டப் பணியை கலெக்டர் தங்கவேல் தலைமையில் அவர் தொடங்கி வைத்தார்.


2,152.50 சதுர அடி பரப்பளவில், மூன்று மாடிகளில் கட்டப்படவுள்ள இப்படைப்பகம், தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு பயன்பாடுகளை தரவுள்ளது.


தரைத்தளத்தில் 38 நபர்கள் வேலை செய்யக்கூடிய பகிர்ந்த பணியிடம், ஆலோசனைக்கூடங்கள், ஏசி, இணைய வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாகிறது.


முதல் தளம் கட்டணமில்லா கல்வி மையமாக செயல்படுகிறது. போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், 51 நபர்களுக்கான வாசிப்பு வசதி, கணினி கள், வைபை வசதி உள்ளடங்கும்.


இரண்டாம் தளத்தில் உணவு சமைத்து உண்பதற்கான வசதியுடன், தேநீர் மற்றும் உணவு அருந்தும் கூடம் அமைக்கப்படுகிறது.


திட்டப்பணிகள் அனைத்தும் தரமான முறையிலும், தாமதமின்றி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், மண்டல குழுத் தலைவர்கள் சக்திவேல், ஆர்.எஸ்.ராஜா, அன்பரசு, எஸ்.பி.கனகராஜ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%