ராமேசுவரம் நினைவிடத்தில் அப்துல் கலாமின் 10-வது நினைவுதினம் அனுசரிப்பு: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

ராமேசுவரம் நினைவிடத்தில் அப்துல் கலாமின் 10-வது நினைவுதினம் அனுசரிப்பு: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

நாட்​டின் 11-வது குடியரசுத் தலைவரான அப்​துல் கலாம் தனது பதவிக் காலத்​துக்​குப் பின்​னர் நாடு முழு​வதும் சுற்​றுப் பயணம் மேற்​கொண்டு பள்​ளி, கல்லூரிகளில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றுப் பேசி, மாணவர்​களுக்கு உத்​வேகத்தை அளித்து வந்தார்.


மேகாலயா மாநிலம் ஷில்​லாங்​கில் உள்ள கல்​லூரி விழா​வில் 2015 ஜூலை 27-ம் தேதி பேசிக் கொண்​டிருந்​த​போது திடீரென மயக்கமடைந்து உயி​ரிழந்​தார். பின்​னர், அப்​துல் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்​கரும்பு என்​னும் இடத்​தில் அடக்கம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், கலாமின் 10-வது ஆண்டு நினைவு நாள் நேற்று நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது.


பேக்​கரும்பு அப்​துல் கலாம் நினை​விடத்​தில் நேற்று காலை கலாமின் சகோ​தரர் மகன் ஜெயினுலாபு​தின், மகள் நசிமா மரைக்காயர், மரு​மகன் நிஜாம், பேரன்​கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்​றும் குடும்​பத்​தினர் இஸ்​லாமிய முறைப்​படி சிறப்​புப் பிரார்த்​தனை செய்​தனர்.


ராமேசுவரம் பள்​ளி​வாசல் ஜமாத் தலை​வர் முகம்​மது நாசர், பாஜக​வின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிம் மற்​றும் பல்​வேறு சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர்​கள் இதில் கலந்து கொண்டனர்.


தொடர்ந்​து, இஸ்​ரோ தலை​வர் நாராயணன், ராம​நாத​புரம் மாவட்ட ஆட்​சி​யர் சிம்​ரன்​ஜீத் சிங் காலோன், வட்​டாட்​சி​யர் அப்​துல் ஜபார் ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர். மேலும், பல்​வேறு அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், பொது​மக்​கள், மாணவ, மாணவி​கள், ராமேசுவரம் வந்த சுற்​றுலாப் பயணி​கள் உள்​ளிட்​டோரும் கலாமின் நினை​விடத்​துக்​குச் சென்று அஞ்​சலி செலுத்​தினர்.


அரசி​யல் தலை​வர்​கள் புகழஞ்​சலி: அப்​துல் கலாம் நினைவு நாளை​யொட்டி பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் புகழஞ்​சலி செலுத்​தி​யுள்​ளனர். அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:


அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: எளிய குடும்​பத்​தில் பிறந்​து, உலகம் போற்​றும் மாமனித​ராக உயர்ந்​து, இந்தியாவுக்கும், தமிழகத்​துக்​கும் பெரும்​பு​கழைத் தேடித்​தந்த கலாமின் நினைவு நாளில், அவரை வணங்​கு​கிறேன்.


தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: உலக அரங்​கில் தவிர்க்க முடி​யாத சக்​தி​யாக இந்​தியா உரு​வெடுக்க முக்​கிய காரணங்​களில் ஒரு​வ​ராகத் திகழ்ந்த அப்​துல் கலாமின் சாதனை​களை நினை​வு​கூர்ந்​து, அவரது பெரு​மையை போற்​று​வோம்.


இதே​போல, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் உள்​ளிட்​டோரும் அப்​துல் கலா​முக்கு புகழஞ்​சலி செலுத்​தி​யுள்​ளனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%