ராஜஸ்தான்: தற்காப்புக்காக சிறுத்தையை கோடரியால் தாக்கிக்கொன்ற விவசாயி
Feb 09 2026
12
ராஜஸ்தான் மாநிலம், கோட்புட்லி-பெஹ்ரூர் மாவட்டத்தில் கர்கதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஷ்ரவன் குர்ஜர்(48). இவர் தனது ஆடுகளுக்குத் தீவனம் சேகிரிப்பதற்காக வயலுக்குச் சென்றிருந்தார். மரக்கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அருகிலுள்ள புதர்களில் மறைந்திருந்த சிறுத்தைக் குட்டி அவரைத் தாக்கியது.
சிறுத்தை நகம் பட்டதோடு கடித்ததில் விவசாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே தன்னை தற்காத்துக்கொள்ள கோடரியால் சிறுத்தையின் தலையில் தாக்கியுள்ளார். இதில் சிறுத்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. காயமடைந்த விவசாயி ஆல்வாரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுத்தையின் உடல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விதிகளின்படி மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரி மனோஜ் நாகா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?