கேரளா: வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரியில் வெடிமருந்து - அதிர்ச்சி சம்பவம்
Feb 09 2026
51
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில் வெங்காயம் ஏற்றிச்செல்லும் லாரியில் வெடிமருந்து கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண்ட் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரி நின்றுகொண்டிருந்தது.
இதையடுத்து, அந்த லாரியில் இருந்த வெங்காய மூட்டைகளை இறக்கிவிட்டு அதில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில் வெடிமருத்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 10 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், ஒயர்கள், டெடனேட்டர்கள், வெடிமருந்து உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர். சட்டவிரோத சுரங்கத்தில் பயன்படுத்த இந்த வெடிமருத்து கடத்தி வரப்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?