மோடியின் கனிவால் நெகிழ்ந்த மொழிபெயர்ப்பாளர்

மோடியின் கனிவால் நெகிழ்ந்த மொழிபெயர்ப்பாளர்

புதுடெல்லி:

இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​ட பிரதமர் மோடியும். அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரும் நிருபர்களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது கெய்ர் ஸ்டார்​மர் ஆங்​கிலத்​தி​லும், பிரதமர் நரேந்​திர மோடி இந்​தி​யிலும் பேசினர்.


பிரதமர் மோடி​யின் இந்தி உரையை ஒரு மொழி பெயர்ப்​பாளர் ஆங்​கிலத்​தில் மொழிபெயர்த்​தார். இதே​போல பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரின் ஆங்​கில உரையை மற்​றொரு மொழிபெயர்ப்​பாளர் இந்​தி​யில் மொழிபெயர்த்து கூறி​னார்.


தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து ஸ்டார்​மர் பேசும்​போது இரு​நாடு​களுக்​கும் பெரு​மள​வில் முதலீடு​கள் குவி​யும் என்று குறிப்​பிட்​டார். அவரது ஆங்​கில உரையை மொழிபெயர்ப்​பாளர் இந்​தி​யில் மொழிபெயர்த்​த​போது பதற்​றத்​தில் தடு​மாறி​னார்.


இதை கவனித்து குறுக்​கிட்ட பிரதமர் நரேந்​திர மோடி, “கவலைப்​ப​டாதீர்​கள், நீங்​கள் சில நேரங்​களில் ஆங்​கில வார்த்​தைகளை தாராள​மாக பயன்​படுத்​தலாம்’’ என்​றார். பிரதமர் மோடி​யின் கனி​வால் நெகிழ்ந்த மொழிபெயர்ப்​பாளர், நன்றி கூறி​னார்.


பிரதமர் நரேந்​திர மோடி​யின் இந்​தி, ஆங்​கில புலமை​யால் இறுக்​கம் மறைந்து கலகலப்​பான சூழல் உரு​வானது. இந்த சுவாரசிய உரை​யாடல் வீடியோ சமூக வலை​தளங்​களில்​ வைரலாக பரவி வருகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%