பிரதமர் பதவியில் தொடர்ந்து 4,078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

பிரதமர் பதவியில் தொடர்ந்து 4,078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

புதுடெல்லி:

தொடர்ந்து 4,078 நாட்​களாக பிரதமர் பதவி​யில் அமர்ந்​து, முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் சாதனையை பிரதமர் நரேந்​திர மோடி முறியடித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி பதவி​யேற்று நேற்​றுடன் (ஜூலை 25) 4,078 நாள்​களை நிறைவு செய்​துள்​ளார். இதன் மூலம், முன்​னாள் பிரதம​ரான மறைந்த இந்​திரா காந்​தி​யின் பதவிக்​கால​மான, தொடர்ச்​சி​யாக 4,077 நாள்​கள் நாட்​டின் பிரதம​ராகப் பதவி வகித்​திருந்த சாதனையை மோடி முறியடித்​துள்​ளார்.


1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை இந்​திரா காந்தி தொடர்ச்​சி​யாக பிரதம​ராகப் பதவி வகித்​திருந்​தார். இதன்​மூலம் அவர் தொடர்ச்​சி​யாக 4077 நாட்​கள் பிரதமர் பதவி​யில் இருந்​தார்.


இந்​நிலை​யில் பிரதம​ராக மோடி பதவி​யேற்று நேற்​றுடன் (ஜூலை 25) தொடர்ச்​சி​யாக 4,078 நாட்​கள் பதவி​யில் இருந்​துள்​ளார். இந்த மைல்​கல் சாதனை​யுடன், முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேரு​வுக்​குப் பிறகு இந்​திய வரலாற்​றில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் பிரதம​ராகப் பணி​யாற்​றிய 2-வது பிரதமர் என்ற சிறப்​பை​யும் மோடி பெற்​றுள்​ளார்.


மேலும், இந்​தியா சுதந்​திரம் பெற்​றதற்​குப் பின்​னர், காங்​கிரஸ் கட்​சி​யைச் சேராத மற்​றும் இந்தி பேசும் மாநிலத்​தைச் சேராத ஒருவர், நீண்ட காலம் பிரதம​ராகப் பதவி வகித்​தவர் என்ற சிறப்​பை​யும் பிரதமர் நரேந்திர மோடி பெற்​றுள்​ளார். அது​மட்டுமல்லாமல், 1971-ம் ஆண்​டுக்​குப் பின்​னர் இந்​திரா காந்​திக்​குப் பிறகு முழு பெரும்​பான்​மை​யுடன் மீண்​டும் ஆட்​சிக்கு வந்த முதல் பிரதமரும் இவர்​தான். மறைந்த முன்​னாள் பிரதமர் நேரு​வைத் தவிர்த்து தொடர்ச்​சி​யாக 3 முறை ஹாட்​ரிக் வெற்றி பெற்ற பிரதமரும் மோடி​தான்.


2002, 2007, 2012 ஆகிய ஆண்​டு​களில் குஜ​ராத் பேர​வைத் தேர்​தலில் வெற்​றி​யும், 2014, 2019, 2024 ஆகிய ஆண்​டு​களில் மக்​கள​வைத் தேர்​தல்​கள் என தொடர்ச்​சி​யாக ஆறு தேர்​தல்​களில் ஒரு கட்​சி​யின் தலை​வ​ராக, இந்​தி​யா​வின் அனைத்து பிரதமர்​கள் மற்​றும் முதல்​வர்​களில் ஒரே தலை​வர் என்ற பெரு​மை​யை​யும் பிரதமர் மோடி தன்​வசம் வைத்​துள்​ளார்.


நேரு முதலிடம்: முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேரு தொடர்ந்து 16 ஆண்​டு​கள் பிரதம​ராக பதவி வகித்து முதல் இடத்​தில் உள்ளார். இந்​தச் சாதனையை பிரதமர் மோடி முறியடிக்க வேண்​டும் என்​றால், 2029-ம் ஆண்டு நடை​பெறும் நா​டாளு​மன்​ற தேர்தலிலும்​ வெற்​றி பெற்​றாக வேண்​டும்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%