மேட்டுப்பாளையம், ஜன.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை போலீஸ் டிஎஸ்பி பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
அதனை ஒட்டி மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் முன்னிலை வகித்தார். மேட்டுப்பாளையம் உட்கோட்டபோலீஸ் டிஎஸ்பி பாஸ்கர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகன கார் ஓட்டுநர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், விபத்துகளை தவிர்க்க கவனமுடன் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அடைந்தது. அங்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?