சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க் கிழமை (அக்.14) சென்னை தலைமைச் செயலகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தோம். இன்னும் சில சாதிப் பெயர்களில் உள்ள ‘ன்’ விகுதியை மாற்றி ‘ர்’ விகுதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரி யர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். வடசென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்” என்று கூறினார். இந்த சந்திப்பின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கே. சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஜெ.முகமது ஷா நவாஸ், எம்.பாபு ஆகியோர் உடனிருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?