அறுசீர் மண்டிலம்.
மாற்றுத் திறனாளி என்றே
மதிக்காமல் விட்டு விடாதே
சாற்று நல்லபடி என்றும்
சந்தனமாய் மணக்க வாழ்த்து!
போற்றி அவர்களையே நாடிப்
புகழ்ந்திடவே வாவா!
ஊற்றைப் போலவேதான் நன்மை
உதவியே செய்திடவே வாவா!
உரிமைப் பாதுகாத்து உதவி
உன்னதமாய்ச் செய்வோம் வாவா
அருமைத் துணையாக எண்ணி
அன்பைத்தான் காட்டு வாவா!
பெருமை கொள்ளாமல் போற்றிப்
பீடு நடையில் வாவா
ஒருமை உணர்வோடு என்றும்
ஒட்டி வாழ வாவா!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%