மாப்பிள்ளை

மாப்பிள்ளை


      சார்... நான் இதுவரையும் எட்டு ஜாதகம் வரை கொண்டு வந்து கொடுத்துட்டேன்.. அதுல நான்கைந்து ஜாதகம் உங்கப் பொன்னு ஜாதகத்தோடப் பொருத்தமாத்தானே இருக்கு! ஆனா எந்த ஜாதகமும் என் பொன்னுக்கு பொருந்திலேன்னு சொல்லி, ‌ஏன் சார் இப்படி எல்லா ஜாதகத்தையும் வேண்டாம்னு சொல்றீங்க? 

பெண்ணின் அப்பா அண்ணாமலையிடம்தான் தரகர் சின்னத்துரை இப்படி கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார். 

அப்படின்னா, ‌உங்கப் பொன்னுக்கு எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு எங்கிட்ட தெளிவாச் சொல்லிடுங்க சார்... 

நான் அதுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்திடறேன்... நல்ல வசதியா, கை நிறைய சம்பாதிக்கிற பையனா பார்க்கட்டுமா? இல்லேன்னா வெளிநாட்டு மாப்பிள்ளையா பார்க்கலாமா? 

ஏதா இருந்தாலும் கூச்சப்படாம எங்கிட்ட சொல்லிடுங்க... இதுல ஒன்னும் ஒளிவு மறைவு வேணாம்... என்றார் தரகர்.. 

யோவ்... என்னாய்யா பேசற... வசதி வாய்ப்பா வேணும்னு நான் ஒன்னும் உங்ககிட்ட கேட்கலையே... நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டு எதையாவது செஞ்சு தொலைக்காதீங்கய்யா... 

பின்னே என்னா சார்... மூணு மாசமா உங்கப் பொன்னுக்கு சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்னு அங்க இங்க அலைஞ்சு திரிஞ்சு மாப்பிள்ளை ஜாதகங்களை தேடி பிடிச்சு கொண்டு வந்தா நீங்க பாட்டுக்கு இது சரியில்லை! அது சரியில்லைன்னு சொல்லி நான் கொடுத்த ஜாதகம் எல்லாத்தையும் திருப்பி எங்கிட்டயே கொடுத்துட்டு வரீங்க... எனக்கு ஒன்னுமே புரியல.. .. 

திரும்பவும் கேட்குறேன்.. உங்க பொண்ணுக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை வேணும்... சொல்லுங்க! 

சின்னத் துரை.. நான் சொல்றதை முதல்ல நல்லா புரிஞ்சுக்குங்க... எனக்கு மாப்பிள்ளையா வரவரு, நல்ல ஒழுக்கமானவரா இருக்கனும்.. எந்தவொரு கெட்டப் பழக்கமும் அவருக்கு இருக்கக்கூடாது... குறிப்பா தாடி வச்சிருக்கக்கூடாது... 

என்னா சார்.. இந்த காலத்துலயும் இப்படி இருக்கீங்க! நல்லா படிச்ச பணக்கார மாப்பிள்ளையா வேணும்னு கேட்பீங்கன்னு பார்த்தா, சாதாரண ஒரு தாடி விசயத்துக்கு இவ்வளவு முக்கியம் தந்து பேசுறீங்க... உங்கள பார்த்தா எனக்கு ஆச்சரியமா இருக்கு! என் சர்வீசுல இது மாதிரி யாரும் சொல்லாத ஒரு புது மாதிரியான தகவலை நீங்க சொல்றீங்க... இந்த காலத்து வாலிப பசங்க எல்லாருமே இப்படித்தான் இளந்தாடி வச்சிகிட்டு திரியறானுங்க! தாடி வச்சிருக்கறதைதான் பெருமையா நினைக்கறாங்க! இதுதானே இளவயசு பசங்க கிட்ட இப்ப பேஷனா இருக்கு...! 

சின்னத்துரை! அது எப்படியோ எனக்கு தெரியாது! எனக்கு மாப்பிள்ளையா வரவரு தாடி வச்சுக்காம இருக்கனும்...தாடி வச்சிருக்கிற பையன் என் பொன்னுக்கு மாப்பிள்ளையா வரது எனக்கு பிடிக்கல....! தயவு செஞ்சு நான் சொல்ற மாதிரி தாடி வச்சிக்காத பையனா பாருங்க! உங்களால முடியும் என்று அண்ணாமலை சொன்னதைக் கேட்ட தரகர், திருமணம் முடியற வரையிலுமாவது தாடி வச்சிக்காம தினசரி முகச்சவரம் செய்யச் சொல்லி ஒரு மாப்பிள்ளையை பேசி முடிக்க வேண்டியதுதான் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு அண்ணாமலையிடமிருந்து விடைபெற்று சென்றார்....

---------------------------------------


தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%