மல்லிகை சாகுபடியில் அசத்தும் மகளிர் சுய உதவி குழுவினர்
Jul 16 2025
10

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தேவாரம்அருகே உள்ள தே.சிந்தலைச்சேரி ஊராட்சிக்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் ஏழைகாத்தம்மன் மகளிர் சுய உதவி குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.10 வருடங்களுக்கு மேலாக மகளிர் சுய உதவிக் குழுவினர் இயங்கி வருகின்றனர்.இந்த சுய உதவிக் குழுவினர் தே.சிந்தலைச்சேரி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பின் மூலம் தொழில் கடன் பெற்று இந்த பகுதிகளில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து மல்லிகை சாகுபடி செய்து வருகின்றனர்.ஏழைகாத்தம்மன் மகளிர் குழுவினை சேர்ந்த சுந்தரி கூறியதாவது:இந்தப் பகுதியில் முதலில் ஆயிரம் மல்லிகை செடிகளுடன் ஆரம்பித்தோம். தற்போது அதனை விரிவாக்கம் செய்து 3000 மல்லிகைச் செடிகளுடன் மல்லிகை சாகுபடியை சிறந்த முறையில் செய்து வருகின்றோம். தினந்தோறும் வருமானம் ஈட்டி அதில் கிடைக்கும் வருமானத்தில் மாதந்தோறும் வட்டியுடன் அசலையும் சேர்த்து நாங்கள் பெற்ற தொழில்கடனை கட்டி வருகின்றோம்.தினமும் 10 கிலோ முதல் 30 கிலோ மல்லிகை எடுத்து விற்பனை செய்து வருகின்றோம். மேலும், முகூர்த்த நாட்களில் அதிகமான அளவில் மல்லிகை எடுத்து விற்பனை செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றோம்.சிறப்பாக செயல்பட்டு வரும் எங்களது ஏழைகாத்தம்மன் மகளிர் குழுவினை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இன்னும் தொழில் கடன் கொடுத்தால் எங்களால் அதிகளவில் மல்லிகை சாகுபடி செய்து சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறினார் ....
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?