மறக்க முடியாத இரட்டை சதம் * சுப்மன் கில் பெருமிதம்

மறக்க முடியாத இரட்டை சதம் * சுப்மன் கில் பெருமிதம்

துபாய்:

''பர்மிங்ஹாம் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தது என்றும் நினைவில் நிற்கும்,'' என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.



சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. ஜூலை மாத விருதுக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டர் பரிந்துரைக்கப்பட்டனர்.



சமீபத்தில் முடிந்த 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் 5 டெஸ்டில், 754 ரன் (4 சதம், சராசரி 75.40, 'ஸ்டிரைக் ரேட்' 65.56) குவித்த சுப்மன் கில், சிறந்த வீரராக தேர்வானார்.



இதுகுறித்து சுப்மன் கில் கூறியது:



ஐ.சி.சி., சார்பில் ஜூலை மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வானது மகிழ்ச்சியாக உள்ளது. இது மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் கேப்டனாக களமிறங்கிய முதல் டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்திய திறமைக்கு ஏற்ப, இது கிடைத்துள்ளது.



பர்மிங்ஹாம் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த தருணம், மறக்க முடியாதது. இது என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும். இங்கிலாந்து தொடரில் சிறந்த தருணங்களில் ஒன்றாக இது எப்போதும் இருக்கும்.



தவிர கேப்டனாக இத்தொடர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள உதவியாக இருந்தது. இந்தியா, இங்கிலாந்து என இரு தரப்பிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் இத்தொடர் ஸ்பெஷலானதாக இருக்கும் என்பது உறுதி.



சிறந்த வீரராக தேர்வு செய்த ஐ.சி.சி., குழுவினருக்கும், இங்கிலாந்து தொடரில் என்னுடன் விளையாடிய சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து வரும் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு, தேசத்திற்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.



இவ்வாறு அவர் கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%