மனைவி மந்திரம் !

மனைவி மந்திரம் !



கையில் பால்சொம்புடன் அறைக்குள் நுழைந்தாள் சுந்தரி. இரவு ஒன்பது மணி ஆகியிருக்க கணவன் ராகவன் படுக்காமல் கட்டிலில் அமர்ந்தவாறு கண்களைமூடிக்கொண்டிருந்தான். வாயில் ஏதோ முணுமுணுப்பு ! முக த்தில் பரவசம் குடிகொண்டிருந்தது.


வியப்புடன் கணவன் அருகில் சென்ற

சுந்தரி அவன் தோள்தொட்டு, " என்ன

ங்க !" என்றாள்.


கண்திறந்தவன் மனைவி கையி லிருந்தடம்ளரை வாங்கி ஒரே மூச்சில் பாலைக்குடித்துவிட்டு காலி டம்ளரை அருகில்இருந்த டீபா மீது வைத்தான்.


" அது சரி. ஏதோ மந்திரம் ஜபித்து க்கொண்டிருந்த மாதிரி தெரிந்தது ?" 


" யெஸ். மனைவி மந்திரம் !" 


" மனைவி மந்திரமா ?"


" ஆமாம் டியர் ! உன்னோட பேரத்தான்

உச்சரிச்சுக்கிட்டிருந்தேன்." 


" அய்யே..போதும் அசடு வழியறது !"


" சுந்தரி ! உன்னோட பெயரை உச்ச ரிக்கிறபோது எப்படியிருக்கு தெரி யுமா ?" 


" எப்படியிருக்கு..?" 


" தேன் குடித்த வண்டு போதையில் தள்ளாடுற மாதிரி இருக்கு !":


" சரிதான். இன்னிக்கு நீங்க ரொமா ன்ஸ் மூடுல இருக்குற மாதிரி தெரி யுது ?"


" நிஜம்மாகத்தான் சொல்றேன். உன்னோட அழகுக்கு மேலும் அழகு சேர்க்குற மாதிரி சுந்தரிங்குற பெயர்...ரியலி சூப்பர்ப் !" 


" சரி...அதுக்கென்ன இப்போ..?" 


" சுந்தரி ! திருமணமானதும் பெண் டாட்டிமார்கள் தங்கள் புருஷன் மார்களின் பெயரை சேர்த்து வச்சு ப்பாங்க இல்லையா?"


" ஆமாங்க ! நான்கூட உங்கள் பெயரை சேர்த்து ' சுந்தரி ராகவன் ' ன்னு மாத்திக்கப்போறேன்." 


வேகமாக இடைமறித்த ராகவன், " வேண்டாம் சுந்தரி அப்படிச் செய் யாதே !" என்றான். அவன் கண்களில் ஒரு உத்வேகமும், முகத்தில் ஒருவித பட படப்பும் காணப்பட்டது .


" ஏங்க...என் ஆசைப்படி நான் பெய ரைமாத்தி வச்சுக்கக் கூடாதா ?" சுந்த ரியைப்பாரக்க பரிதாபமாக இருந்தது.


" டார்லிங் ! உன் பெயரைமட்டும் உச்சரிக்கும்போது அதுல ஒரு தனி த்துவம் காணப்படறது. அதுல ஒரு கிக்கும் இருக்கறது. என் பெயரை சேர்த்தால் அது ஸ்பாயில் ஆகிடும். அதில எனக்கு உடன்பாடில்ல. அப்பு

றம் உன்னிஷ்டம் ! " 


கணவனை ஒரு மாதிரி பார்த்த சுந்தரி, " சரிங்க. உங்கள் இஷ்டப் படியே ஆகட்டும்." என்றாள்.


நாட்கள் ஓடின.


" அம்மா சுந்தரி.." தந்தை குரல் கேட்டு

கண் விழித்த சுந்தரி எழுந்து உட்கார்ந்

தாள்.


" சீக்கிரம் எழுந்து குளிம்மா. கெஜ ட்டுல உன் பேரை மாத்தணும்னு அன்னிக்குசொன்னியே. இப்போ போகலாம்."


" வேண்டாம்பா. பெயரை மாத்த வே ண்டாம்." 


" ஏம்மா ?" திடுக்கிட்டார் தந்தை .


அன்று நேரில் சொன்ன கணவன் நேற்று இரவு கனவிலும் வந்து அதே வார்த்தைகளைச் சொல்ல சுந்தரிக்கு வேறு வழி தெரியவில்லை.


" அப்பா ! உங்கள் மாப்பிள்ளையின் இஷ்டம் நான் பெயர் மாத்தக் கூடா துங்கறது . அவர் விருப்பத்துக்கு மாறாக நான் நடக்க விரும்பல்லே. என்னை மன்னிச்சிடுங்க!"


பதிலேதும் கூறாமல் வெளியேறினார்

சுந்தரியின் தந்தை.


சுந்தரியின் பார்வை அறையின் மூலைக்குச் சென்றது. மேஜைமீது வைக்கப்பட்டிருந்த கேபினட் ஸைஸ் புகைப்படத்தில்ராகவ ன் சிரித்துக் கொண்டிருந்தான்.புகைப்படத்தில் நேற்று மாலை சாத்தியிருந்த மல்லிகைப் பூ மாலையும் சிரித்தது.

இறந்து போன புருஷனின் நியாபகா

ர்த்தமாக அவன் பெயரை தன் பெய 

ரோடு சேர்த்து வைத்துக் கொள்ள 

லாம் என்ற ஆவல் கொண்டிருந் 

தாள் சுந்தரி. ஆனால் உயிரோடிருந்த

போது அவன் கூறிய அந்த வார்த் 

தைகளை திரும்பவும் கனவில் கூறி 

யதால் அவள் மனம் மாறியது ! நெஞ்

சும் கனத்துப் போனது ! 



-வி.கே.லக்ஷ்மிநாராயணன்

                ........................................

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%