news Breaking News
clock

என்றும் தமிழன்

என்றும் தமிழன்



  " புலியின் வாலைப்

    பிடிக்கும் வீரமும்

    தைரியமும்

    தமிழனுக்கு உண்டு ..."


    தாய்ப்பால் குடித்து

    தமிழ்ப்பாலில்

    கலந்த உடல்

    அஞ்சாது ஆடாது

    அசையாது .... "


    தாய் மண்ணிற்கு

    உயிர் கொடுக்கும்

    பரம்பரை தமிழினம் ..."


    அறிவோ ஆக்கமோ

    ஆன்மீகமோ தியாகமோ

    விருந்தோம்பலோ

    வித்தையோ வீரமோ..."


    அறியாத தமிழன்

     யாரும் இல்லை

    அன்பால் கட்டிப்

    போட்டால் காலடியில்

    தவமாய் கடப்போம் ..."


    அடக்கி ஆண்டு

    ஆவணம் கொண்டு

    அடிமைப் படுத்தினால்

    புயலையும் தாண்டி

    பூகம்பமாய் வெடிப்போம் ...."


    கண் பார்வைக்கும்

    விரல் ஜாலத்திற்கும்

    இதழ் விரிப்புக்கும்

    கலைநயம் கண்ட

     கலைஞன் தமிழன் ..."


    விதியை மதியால்

    வென்று சரித்திரம்

    படைத்தவன் தமிழன்

    பார்வையில் எளியவன்

    போர் என்றால்

     வலியவன் தமிழன் ...."


- சீர்காழி. ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News