மனமது விசித்திரமானது
மறக்க நினைப்பதை
மறக்க விடாது ...
இயல்பாய் நடப்பதை
ஏற்றுக் கொள்ளாது...
ஏற்றுக்கொள்வதை
எக்காலமும் விடாது ...
மனதுக்குப் பிடித்ததை
மறுக்காது செய்யும் ..
மனமது மறுத்தால்...
பிடிவாதம் பிடிக்கும் ..
மனம் ஒரு குரங்கு
மாறிக்கொண்டே இருக்கும்..
மாறியதிலும் பற்றில்லாமல்.
மறுபடியும் அல்லாடும்
உளத்தின் இயல்பது..
உலகத்தில் காண்பது ..
உளவியல் அறிந்தோர்
உரைப்பதும் இதுவே ..

தி.வள்ளி
திருநெல்வேலி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%