வேலூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: தமிழக - ஆந்திர எல்லையில் உடல் வீச்சு

வேலூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: தமிழக - ஆந்திர எல்லையில் உடல் வீச்சு


 

வேலூரில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை, நண்பர்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். மேலும், அவரது உடலை தமிழக ஆந்திர எல்லையில் வீசிய நிலையில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின் றனர். மற்றொருவரை பிடிக்க தனிப்படை போலீஸார் பாண் டிச்சேரி விரைந்துள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனி வளனரசு (19). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.பாதுகாப்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் ஆரணி அடுத்த தொந்திகரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), பாண்டிச்சேரியைச் சேர்ந்த பார்த்த சாரதி (19). இவர்கள், வேலூர் சாயிநாதபுரம் பொன்னி அம்மன் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்றுவந்தனர்.


இவர்களுடன், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்பா வர்மா என்ற முதலாம் ஆண்டு பாதுகாப்பியல் துறை மாணவரும் தங்கியிருந்துள் ளார். கல்லூரிக்கு பருவத்தேர்வு விடுமுறை என்பதால் அனை வரும் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.


கல்லூரி என்.சி.சி மாணவர் களுக்கான முகாம் தாம்பரத்தில் நேற்று தொடங்க இருந்ததால் அங்கு செல்வதற்காக டேனி கடந்த 1-ம் தேதி மாலை சாயி நாதபுரத்தில் உள்ள தங்கும் அறைக்கு வந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் அவர் தொடர்புகொள்ள வில்லை.


டேனி வளனரசுவின் இரு சக்கர வாகனத்தை அவரது தந்தை ஆனந்த்திடம், கிஷோர் கண்ணன் நேற்று முன்தினம் பகல் 1 மணியளவில்கொடுத்துள் ளார். அப்போது, 'டேனி, இந்த வண்டியை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்' என்று மட்டும் கூறியுள்ளார்.


இதனால், சந்தேகம் அடைந்த அவர் டேனியின் கைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டபோது 'ஸ்விட்ச் ஆப்' ஆகியிருந்தது. இதையடுத்து, கிஷோரிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.


இதனால், சந்தேகம் அடைந்த ஆனந்த், மகனின் வேறு சில நண்பர்களிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரித் துள்ளார். பின்னர், தனது மகனை காணவில்லை என வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். அதன்பேரில், ஆய் வாளர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் கிஷோர் கண்ணனிடம் விசாரித்தபோது, டேனியை, நானும், நண்பர் பார்த்த சாரதியும் சேர்ந்து கொலை செய்து உடலை தமிழக - ஆந்திர எல்லையில் வீசியதாக ஒப்புக் கொண்டார்.


பின்னர், கிஷோர் கண்ணன் கூறிய இடத்தில் வீசப்பட்டிருந்த டேனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான பார்த்தசாரதியை கைது செய்ய தனிப்படை போலீஸார் பாண்டிச்சேரி விரைந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%