மதுரையில் நடைபெற்ற 10 நாள் குளிர்கால கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

மதுரையில் நடைபெற்ற 10 நாள் குளிர்கால கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு



மதுரை, ஜன


மதுரையில்‌ வைகை கூடைப்பந்து கழகம் சார்பில் பி.ஒ.பி கூடைப்பந்து அகாடமி நிறுவனர் மார்த்தாண்டபூபதி வழிகாட்டுதலின்படி மதுரை கூடைப்பந்து கழகத்துடன் இணைந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 10 நாள் குளிர்கால கூடைப்பந்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


இந்த பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி டி.எஸ்.பி மோகன்குமார் முன்னிலையில், மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.ஆர் ராஜ்சத்யன், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி‌ கோயில் அறங்காவலர் 'ஆன்மீகச்செம்மல்' முனைவர் வ.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கூடைப்பந்து கழக பொருளாளர் சந்தானம், மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகாடமி பயிற்சியாளர்கள் சதீஸ், மாரி ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்பு‌ பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் வைகை கூடைப்பந்து அகாடமி தலைவர் சுரேஷ்குமார், பாப் கூடைப்பந்து அகாடமி தலைவர் வெள்ளத்துரை மற்றும் முனைவர் ரெகுபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் சிறப்பாக செய்திருந்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%