வாழ்க! வாழ்க!! தமிழ்நாடு!!

வாழ்க! வாழ்க!! தமிழ்நாடு!!



கவிஞர் இரா. இரவி.


******


சென்னை என்று இருந்த மாநிலத்திற்கு

செந்தமிழில் தமிழ்நாடு என்று சூட்டினார் அண்ணா!


நடுவணரசிற்கு நல்ல வருமானத்தை நாளும்

நல்கிடும் மிகச்சிறந்த மாநிலம் தமிழ்நாடு!


உலகின் முதல்மொழியான தமிழ்மொழி

உன்னத மொழியின் பிறப்பிடம் தமிழ்நாடு!


தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!

தரணிக்கு தமிழன் பெருமை பறைசாற்றிய தமிழ்நாடு!


ஏறுதழுவுதலை தடைசெய்திட்ட போதும் எல்லா

இளைஞர்களும் பொங்கி எழுந்து போராடிய தமிழ்நாடு!


என்ன வளம் இல்லை என்று சொல்லுமளவிற்கு

எல்லா வளங்களும் நிரம்பப் பெற்ற தமிழ்நாடு!


பண்பாட்டை தரணிக்குப் பறைசாற்றி

பெருமைகள் பல பெற்றிட்ட தமிழ்நாடு!


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநிலம்

சங்கத்தமிழை இன்றும் போற்றிவரும் தமிழ்நாடு!


உலகப்பொதுமறையான திருக்குறளின் பெருமையை

உலகிற்கு ஓதிவரும் ஒப்பற்ற தமிழ்நாடு!


வியக்கும் கோயில்கள் கொண்ட மாநிலம்

வந்தார் வியக்கும் விந்தைமிகு தமிழ்நாடு!


இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதன்மையானது

இனிமைகள் மிக்க பெருமைகள் பெற்ற தமிழ்நாடு!


தனித்த அடையாளம் மிக்க மாநிலம்

தன்னிகரில்லாப் பெருமைகள் பெற்ற தமிழ்நாடு!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%