மதுரை, பிப்.
- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா மற்றும் மன்றப் போட்டி கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டி களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்க ளைப் பெறும் மாணவர்கள் அரசு செல வில் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவது சிறப்பம்ச மாகும். அந்த வகையில், கடந்த கல்வியாண் டில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மூவர், மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவாக பிப்.9 ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளனர். மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி எம்.சாருலதா (தற்போது 8-ஆம் வகுப்பு) கவிதை எழுதும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.அமித்தா கதை சொல்லும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மேலும், மேலூர் அருகே குறிச்சிபட்டி அரசு நடுநிலைப்பள்ளி யைச் சேர்ந்த மாணவன் ஜி.பாலாஜி, வான வில் மன்றப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இந்த மூன்று மாணவர்களும் பிப்.9- ஆம் தேதி சென்னை விமான நிலையத்தி லிருந்து மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்று லாவிற்காக புறப்பட உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்து வெளிநாட்டு கல்விச் சுற்றுலா செல்லும் இந்த நிகழ்வு, பிற மாண வர்களுக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?