க.விலக்கில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி 3 பேர் பலி

க.விலக்கில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி 3 பேர் பலி



தேனி, பிப்.

ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதி யில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக் கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயி ரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி–மதுரை, வருசநாடு மற்றும் வைகை அணை செல்லும் சாலைகள் சந் திக்கும் க.விலக்கு நாற்சந்திப்பு பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் மிகுந்த பகுதியாக உள் ளது. இந்நிலையில் க.விலக்கு சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக் கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நாராயண சடனம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் ஓட்டி வந்த கார், தேனியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்தது. க.விலக்கு நாற் சந்திப்பு அருகே வந்தபோது கட்டுப் பாட்டை இழந்த கார், சாலையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள் மீது மோதி, தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது பயங்கர சத்தத்து டன் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை க.விலக்கு போலீசார் மற்றும் பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பினர். ஆனால் கண்டம னூர் வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் (75), செல்வம் (50) மற்றும் ஏரதிமக்காள் பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (60) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த னர். மேலும் அரசரடியைச் சேர்ந்த பாக்கி யலட்சுமி (39) என்பவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய அஜித்குமாரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%