மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்

மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்



விமான கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

திருச்சி


திருச்சி அருகே உள்ள மண்ணச்சல்லூர் நகரத்தில் உள்ளது பூமிநாதர் திருக்கோவில். இந்த திருத்தலத்தின் முழுமையான பெயர், "அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி" ஆலயம். பூமி சம்பந்தமான 16 வகையான தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.


பிரசித்தி பெற்ற இக்கோவில் பழுதடைந்து இருந்ததால் அதை பழமை மாறாமல் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாலயம் நடத்தப்பட்டு ராஜகோபுரம், விநாயகர், தர்மசம்வர்த்தினி உடனுறை ஸ்ரீபூமிநாதசுவாமி மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களின் விமான கோபுரங்கள் அழகுற அமைக்கப்பட்டது.


திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி கடந்த 30-ந்தேதி அனுக்ஞை, மற்றும் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. 31-ந்தேதி அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம் நடைபெற்றது. 1-ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர்.


தொடர்ந்து கஜபூஜை, அசுவபூஜை, கோபூஜை, அக்னி சம்கிரகணம், தீபாராதனை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலாகர்ஷனம் நடைபெற்றது. மாலையில் முதல் காலபூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரண்டாம் காலயாக சாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாகபூஜை நடைபெற்றது.


இன்று காலை 6 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து கஜபூஜை, அசுவபூஜை, கோபூஜை, நாடிசந்தனம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து மகா பூர்ணாஹுதியும், 9.30 மணிக்கு மேல் கடம் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படடது.


விமான கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%