போராட்டத்தில் இறங்கும் ‘செயலி வழி’ தொழிலாளர்கள் டிச.31-இல் ஆன்லைன் டெலிவரி சேவைகள் நிறுத்தம்
Dec 30 2025
14
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலி வரி ஊழியர்கள் உள்ளிட்ட ‘கிக் (GIG) தொழிலாளர்கள்’ (செயலி வழித் தொழிலாளர்கள்) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளனர். இதற்காக டிசம்பர் 31 ஆம் தேதி முதலே டெலிவரி சேவைகள் நிறுத்தப்படலாம் கூறப்படுகிறது. ஸ்விக்கி, ஜொமாட்டோ, செப்டோ, பிளிங்கிட், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள், தங்களின் பணிச்சூழல் மற்றும் ஊதிய முரண்பாடுகளுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். புத்தாண்டு போன்ற நிகழ்வு களில் பணிச்சுமை பல மடங்கு அதிகரிப்பதாகவும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த போராட்டத்தின் மூலம் வெளிப் படையான, நியாயமான ஊதிய முறை, 10 நிமிட டெலிவரி போன்ற ஆபத்தான நடைமுறைகளை ரத்து செய்தல், காரணமின்றி ஐடி பிளாக் செய்தல், அபராத விதிகளை நீக்கு தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நிரந்தர வேலை வாய்ப்பு, மரியாதையாக நடத்துதல், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், ஓய்வு நேரம், மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நலத் திட்டங்களையும் ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?