அன்பெனும் பெரு வடிவே சக்தி.
அருளாய் மிளிரும் எழிலே சக்தி.
ஆக்கம் மிகும் அறிவே சக்தி.
ஆசை தரும் நிறைவே சக்தி.
இன்பம் எனும் நிலையே சக்தி.
இருள கற்றும் ஒளியே சக்தி.
ஈசனோ டெழும் சுடரே சக்தி.
ஈண்டவள் நிகர் எவர் சக்தி.
உண்மை பேசும் உயர்வே சக்தி.
உலக முய்யும் உழைப்பே சக்தி.
ஊக்கம் தரும் உறவே சக்தி, மன
ஊனம் அகற்றும் ஞானம் சக்தி.
எங்கும் நிறைந்த அழகே சக்தி.
எல்லாமு மாகும் இறையே சக்தி.
ஏற்றம் தரும் துணிவே சக்தி.
ஏறுபோல் நடை மிடுக்கே சக்தி.
ஐயம் நீக்கும் அனுபவம் சக்தி.
ஐம் புலனின் அடக்கமே சக்தி.
ஒன்று பட்ட வலிமையே சக்தி.
ஒளிப் பிழம்பின் உருவே சக்தி.
ஓங்கார நாதத்தில் உயிரே சக்தி.
ஓங்கி வளரும் நலமே சக்தி.
ஔவையின் அழகு தமிழே சக்தி.
எஃகு போன்ற உறுதியே சக்தி.
உயிரும் மெய்யும் உறைந்த உயிர் மெய்யே சக்தி.!
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?