பேரிடர் பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடி நிதி: மத்திய அரசு ஒப்புதல்

பேரிடர் பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடி நிதி: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி:

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் ரூ.1,066.80 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.


ரூ.8,000 கோடிக்கு மேல்.. நிதி உதவியை தவிர, மாநிலங்​களுக்கு தேவை​யான பேரிடர் மீட்​புப் படை, ராணுவம், விமானப்​படையை அனுப்​புவது உட்பட அனைத்து தளவாட உதவி​களை​யும் வழங்​கு​வது அரசின் முன்​னுரிமை​யாக உள்​ளது.


வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட ஆறு மாநிலங்​களில், அசாமுக்கு ரூ.375.60 கோடி, மணிப்​பூருக்கு ரூ.29.20 கோடி, மேகால​யா​வுக்கு ரூ.30.40 கோடி, மிசோர​முக்கு ரூ.22.80 கோடி, கேரளா​வுக்கு ரூ.153.20 கோடி மற்​றும் உத்​த​ராகண்​டிற்கு ரூ.455.60 கோடி மத்​திய அரசின் பங்​காக வழங்​கப்​படு​கிறது.


இந்த ஆண்டு தென்​மேற்கு பரு​வ​மழை​யின் போது ஏற்​பட்ட மிக அதிக கனமழை, வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு​களால் இந்த மாநிலங்​கள் பெரும் பாதிப்பை சந்​தித்​துள்​ளன.


இந்த ஆண்டு 19 மாநிலங்​களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியி​லிருந்து ரூ.8,000 கோடிக்கு மேல் வழங்​கப்​பட்​டு உள்​ளது. இவ்​வாறு அமித் ​ஷா தெரி​வித்​தா​ர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%